மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி 123 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் அவரது உருவச் சிலைக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் 123 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அன்னாரின் மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இன்று (23.06.2023) மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரிசாமி தியாக உணர்வை பறைசாற்றும் வகையில் பட்டுக்கோட்டையில் அன்னாரின் நினைவு மணிமண்டபம் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மொழிப் போர் தியாகி அழகிரிசாமி 123 வது பிறந்த நாள் விழா செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் (23.06.2023) கொண்டாடப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தமிழக அரசின் சார்பில் மொழிப்போர் தியாகி அழகிரிசாமி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எல் .குமார் (பொ) வருவாய் கோட்டாட்சியர் .பிரபாகரன், நகரமன்றத் தலைவர் செ.சண்முகப்பிரியா செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கார்த்திக்ராஜ் (பொ), வட்டாட்சியர் ராமச்சந்திரன், தியாகி அழகிரிசாமியின் பேரன் சுப்பையாராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.