Close
நவம்பர் 22, 2024 12:31 காலை

மீன் தீவன ஆலை அமைக்க மானியம்: ஆட்சியர் மெர்சி ரம்யா தகவல்

புதுக்கோட்டை

மானியத்தில் சிறிய வகை மீன் தீவன ஆலை அமைக்க மானியம்

பிரதான் மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டம் (PMMSY) 2022-23-ன் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்வளர்ப்பு விவசாயி களுக்கு பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு (GC) 40% மானியத் தில் சிறிய வகை மீன் தீவன ஆலை (1அலகு) (தினசரி 2/டன் உற்பத்தி திறன்) செயல்படுத்தபடவுள்ளது.

மேற்கண்ட மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற் கேற்றவாறு திட்டவழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்களில் முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கு, சொந்த நிலம் அல்லது குத்தகைநிலம்( குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருத்தல் வேண்டும்). கடந்த 2018-19 முதல் 2020-21 முடிய உள்ள ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் மத்திய/மாநில அரசிடமிருந்து உள்ளீட்டு மானியம் பெற்றவர்களுக்கு இம்மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் ஆவர்.

மேற்படி திட்டத்தில் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளி கள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று G+ பூர்த்தி செய்து உரிய ஆவணங் களுடன் விண்ணப்பத்தினை 20.07.2023-க்குள் புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறது.

அலுவலக முகவரி, மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், பிளாட் எண்.1 டவுன்நகரளவு எண்.233/1, அன்னைநகர், நிஜாம் காலனி விஸ்தரிப்பு, புதுக்கோட்டை, தொலைபேசி எண் 04322- 266994, 93848 24268 ஆகும் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தெரிவித்துள் ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top