Close
நவம்பர் 22, 2024 5:43 மணி

ஜூன் 27 ல் பொன்னமராவதி அருகே கால்நடை மருத்துவ சிறப்பு முகாம்

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே ஒலியமங்கலம் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவமுகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, ஒலியமங்கலம் கிராமத்தில் 27.06.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத் துறை, ஆவின் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைகழகம் இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த முகாமில் நோய் வாய்ப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல், குடற்புழுநீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், மலடுநீக்க சிகிச்சைகள், சினை சரிபார்ப்பு, கோழி தடுப்பூசிகள், வெறிநோய் தடுப்பூசிகள் தீவன வளர்ப்பு,

சிறு அறுவை சிகிச்சைகள், வகைப்படுத்தப்பட்ட பெண் கன்று உற்பத்திக்கான விந்தணு பிரித்தறிதல், புல்வளர்ப்பு, தாது உப்பு கலவை மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

கால்நடை வளர்ப்பில் உண்டாகும் பல்வேறு சந்தேகங்களுக்கு முகாம்களில் பங்கேற்கும் மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர்கள், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைகழக பேராசிரியர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் ஆகியோர்கள் பதில் அளிப்பார்கள். மேலும், கிடேரி கன்று பேரணி நடத்தி சிறந்த மூன்று கன்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

மூன்று சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முகவாய் பதிவு மூலம் அடையாளப்படுத்துவதற்கான விளக்க உரைகளும் வழங்கப்படும்.

எனவே, ஒலியமங்கலம் கிராமம் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் 27.06.2023 அன்று நடைபெறும் மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top