Close
நவம்பர் 23, 2024 1:15 மணி

கோபி காவல் நிலையத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

ஈரோடு

கோபிச்செட்டிபாளையம் காவல்நிலையத்தில் ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு

ஈரோடு, கோபிசெட்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ரயில் மூலம் ஈரோடு வந்தார்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை, ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் போலீசார் வரவேற்றனர்.

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு வெகுமதி வழங்கினார்.

பெருந்துறை பகுதியில் 238 கிலோ குட்கா பறிமுதல் செய்த பெருந்துறை ஆய்வாளர் மசூதாபேகம், காவலர்  சுந்தரம் ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

இதேபோல் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூ.1 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை பிடித்த உதவி ஆய்வாளர்கள்க சுரேஷ், மெய்யழகன், செந்தில்குமார் ஆகியோரையும், கருங்கல்பாளையம் பகுதியில் 30 ரவுடிகள் கைது செய்யப்பட்டு அதில் 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த ஈரோடு அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் கோமதி ஆகியோரை பாராட்டி வெகுமதி வழங்கினார்.

அதைத் தொடர்ந்து கோபி காவல்நிலையம் வந்த டிஜிபி சைலேந்திரபாபு, அங்கு  ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு, தான் முதன் முதலில் பணியாற்றிய இடத்தை நினைவு கூர்ந்ததோடு, அப்போது பணியாற்றி ஓய்வு பெற்ற போலீசாரை அழைத்து நலம் விசாரித்தார்.

மேலும் அவர் கூறுகையில் 1989 ஆம் ஆண்டு கோபியில் பணியில் சேர்ந்த அப்போது வீரப்பன் கூட்டாளிகள் பிரச்னை அதிக அளவில் இருந்தபோது. அப்போது கோபி ஒரு பிரச்னைக்குரிய இடமாக காணப்பட்டது.

தற்போது அமைதி நிலவும் பகுதியாக கோபி உள்ளது கோபி ஸ்டேஷனில் அனைத்து ஆவணங்களும் சரியாக பராமரிக் கப்பட்டு வருகிறது மேலும் வழக்குகளும் சரியான முறையில் பதிவுகள் செய்யப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top