Close
நவம்பர் 22, 2024 6:22 மணி

புத்தகம் அறிவோம்.. உடலை நலமாக்கிடும் யோகா..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

உடலும், மனமும் வளம் பெற யோகா செய்வோம். ஜூன் 21, சர்வதேச யோகா தினத்தின் ஒன்பதாவது ஆண்டு.2014-ஆம் ஆண்டு செப்.27 -ஆம் தேதி ஐ.நாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தார்.

அதனை ஏற்றுக்கொண்ட ஐ.நா. 2014 டிசம்பர் மாதம் 11 தேதி, ஆண்டுதோறும் சர்வதேச அளவில் ஜூன் 21 யோகா தினம் கொண்டாடப்படும் என்று அறிவித்தது. அதனை ஒட்டி 2015 ஜூன் 21 அன்று முதல் “சர்வதேச யோகா தினம்” கொண்டாடப்பட்டது.

யோகா இந்தியாவின் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கண்டுபிடிப்பு. உடலுக்கும், மனதிற்கும் வலிமையையும், அமைதியையும் தரும் ஒரு பயிற்சி.

“உடலை ஆரோக்கியமாக்க, மனதை அமைதியாக்க, உறவுகளை இனிமையாக்க, வாழ்வை மகிழ்ச்சியாக்க மிகச்சிறந்த முறை யோகா” என்கிறார் வேதாத்ரி மகரிஷி.
‘உலக அமைதிக்கான யோகா,”ஆரோக்கியத்திற்கான யோகா’
‘மனிதகுலம், மனிதநேயத்திற்கான யோகா ‘ என்று ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளை வைத்து யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உபநிஷ ஸ்லோகமாகும். இதன் பொருள் ‘உலகம் ஒரே குடும்பம்’ என்பதாகும். இந்தியாவில் இன்றைய கருப்பொருள் ‘ஊர்தோறும் வீடுதோறும் யோகா ‘ என்பதாகும்.

தந்தையும் மகளும்- முனைவர் விஜயரகுநாதன், முனைவர் ராஜசரோ-எழுதியிருக்கும் ‘உடலை நலமாக்கிடும் யோகா’ என்னும் இந்த நூல் தமிழில் யோகாவைப் பற்றி எழுதப் பட்டுள்ள சிறந்த நூல்களில் ஒன்று.

விஜயரகுநாதன் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ் கல்லூரியில் உடற்பயிற்சி இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். யோகாவில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். ராஜசரோ அரசுப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியை.

இந்த நூல் அரசியல் தலைவர்களின் யோகம் பற்றிய கருத்துகள்,யோகா ஒர் அறிமுகம், அட்டாங்க யோகம்,யோகா சணங்களும்பயிற்சிகளும்,பிராணாயாமம், தியானம் ,பந்தங்கள், முத்திரைகள் ,யோகங்களின் வகைகளும் விளக்கங்களும் என்று 10 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றைப் பற்றியும் தெளிவான விளக்கங்களும், ஒவ்வொரு யோகாவின் பயன்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. பயிற்சி முறைகளும் படங்களுடன் தரப்பட்டுள்ளது.

 நீண்ட வாழ்வும் உடல் மனநலமும் பெற யோகாசனப்பயிற்சி சிறந்தது. நெடுங்காலம் வாழவும் ,உடலையும் உள்ளத்தையும் நல்ல நினையில் வைத்துக்கொள்ளவும் நாள்தோறும் சாதாரண யோகா பயிற்சிகளைச் செய்து வர வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளாக எவ்வளவு அலுவல்கள் குவிந்திருந் தாலும் ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் (பிரணாயாமம்) பயிற்சிக்காகவும், சிரசாசனப் பயிற்சிக்காகவும் (தலைகீழாக நிற்பது) ஒதுக்கிவிடுகிறேன்.

அது என் உடல்நிலையைப் பக்குவமாக வைத்திருக்கப் பெருதும் பயன்பட்டு வருகிறது” பக்.8. என்று நேரு சொல்வது போல் உடலை பக்குவமாக வைத்திருக்க யோகா செய்வோம். அதற்கு இந்த நூலை வாங்கி வாசிப்போம்.டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை. 8754507070.

## பேராசிரியர் விஸ்வநாதன்-வாசகர் பேரவை##

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top