Close
செப்டம்பர் 20, 2024 3:46 காலை

புத்தகம் அறிவோம்… தேசத்தந்தைகள்..

தமிழ்நாடு

புத்தகம் அறிவோம்

தனக்கு ஒரு தலைவரை பிடிக்கவில்லை என்றால் பொதுவாக அனைவரும் சொல்லக்கூடிய வாசகம் “இவருக்குப்பதில் இவர் இருந்திருந்தால் ” என்பது. இந்த ‘ifs & but’ நடைமுறை எல்லாக் காலத்திலும் உண்டு.

தற்போது அது அதிகமாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட வாசகங்களுக்கு அறிய தகவல்களுடன் நடுநிலையோடு பதிலளித்திருக்கிறார் ராஜ்மோகன் காந்தி “தேசத்தந்தைகள்” நூலில்.

ராஜ்மோகன் காந்தி, காந்தி, ராஜாஜியின் பேரன்.காந்தியின்
கடைசி பிள்ளை தேவதாஸ் காந்திக்கும், ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் பிறந்தவர். மிகச்சிறந்த (வாழ்க்கை வரலாற்று) எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஆய்வாளர், மனித உரிமை செயல்பாட்டாளர்.

இவர் எழுதிய படேல், நேரு, காந்தி, ராஜாஜி வாழ்க்கை வரலாறுகள் புகழ்பெற்றவை. Modern South India என்ற நவீன தென்னிந்திய வரலாறு வாசிக்கப்பட வேண்டிய நூல்களில் ஒன்று. “ராஜ்மோகன் காந்தியின் இந்தப் புத்தகம் (தேசத் தந்தைகள்) நாட்டின் நிர்மாணச் சிற்பிகள் பற்றிப் பேசுகிறது.

சுதந்திரம் பெற்றதிலிருந்து நாடு சந்தித்த அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்தபடி நிலைபெற்று நிற்கும் இந்திய கருத்தாக்கத்தை வடிவமைத்த சக்திவாய்ந்த அரசியல் தலைவர்கள் அவர்கள்.நேரு, காந்தி, படேல், நேதாஜி போன்ற தலைவர்கள் மாறுபட்ட அணுகுமுறைகள், நிலைப்பாடுகள் கொண்டவர்களே.

எனினும் சாதி மோதல், மதச் சகிப்பின்மை, பிரிவினைவாதம் போன்றவற்றை ஒன்றுபோல் எதிர்த்தவர்கள். வேறுபாடுகள் கடந்து நம் தேசத்தை ஒருங்கிணைத்தவர்கள். சமீபகாலமாக இந்த மேதைகள், அவமதிப்புக்கும் தேவையற்ற தாக்குதலுக்கும் உள்ளாகி வருகிறார்கள்.

இந்நிலையில் காந்தியின் பெயரன் ராஜ்மோகன் காந்தி கடந்தகாலத்தை மறுவாசிப்பு செய்து நம் தேசத்தந்தைகள் பற்றிய சித்திரத்தை சீர்படுத்தியிருக்கிறார்.இந்தியப் பிரிவினை, ஜின்னாவின் சர்ச்சைக்குரிய அரசியல், காந்தி அப்பேத்கார் முரண் என்று தொடங்கி இந்தியர்களை வாட்டும் விடை தெரியாத பல கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் இந்த நூல் தகுந்த சான்றாதாரங்களுடன் விடையளிக்கிறது.

நவீன இந்திய வரலாற்றில் ஆர்வம் கொண்ட அனைவருக் குமான அவசியமான நூல் இது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்நூலை ஜனனி ரமேஷ் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழாக்கம் செய்திருக்கிறார்.கிழக்கு பதிப்பகம் வெளியீடு. 044 – 42009603.

# பேராசிரியர் விஸ்வநாதன்- வாசகர் பேரவை #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top