Close
நவம்பர் 22, 2024 7:33 மணி

வாகன ஓட்டுநர்களுக்கு விடுதிகளில் ஓய்வு அறை: இறையன்பு கடிதம்

தமிழ்நாடு

தலைமைச்செயலர் வெ. இறையன்பு

தமிழக அரசு சமீப காலமாகவே, அதிரடியாக அரசு துறைக ளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. துறை ரீதியாக தலைமைச் செயலர் வெ. இறையன்பு கூறும் விஷயங்களில் தீவிர கவனத்தையும் மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக,  விடுதிகளில் தங்க இயலாமல் தவிக்கும் ஓட்டுனர்களின் நலன்கள் மீது அக்கறை செலுத்த வேண்டுமென  சுற்றுலா துறைக்கு  கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது தொடர்பாக,வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை முதன்மை செயலாளர் அபூர்வ வர்மாவிற்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் , பல்வேறு இடங்களுக்கு வாகனங்களில் செல்வோர் தங்கும் இடங்களில் ஓட்டுநர்களுக்கு அறை வழங்க வேண்டும். வாகனங்களில் செல்வோர் அறைகளில் தங்கும் நிலையில் வாகன ஓட்டுநர் கள் வராண்டாவிலும்,  வாகனத்திலும் தூங்கு கின்றனர்.

சரியான தூக்கம் இன்றி ஓட்டுநர்கள் வாகனங்களை இயக்கும் நிலையில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.  தங்கும் விடுதிகளில் குறைந்த கட்டணத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு அறை வழங்க அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர்கள் தங்கும் அறைக்கான  குறைந்த கட்டணத்தை வாகன பார்க்கிங் கட்டணத்துடன் சேர்க்கலாம் என்றும் கூறியுள்ளார் இறையன்பு.

அந்தவரிசையில்,  தமிழகம் முழுவதும் உள்ள சுடுகாடுகள்  பசுமை மயானங்களாக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலர் இறையன்பு  சில நாட்களுக்கு முன்புகூட கடிதம் எழுதியிருந்தார்.

சுடுகாடுகள்: அந்த கடிதத்தில், பல இடங்களில் மயானங்கள் மற்றும் சுடுகாடுகள் அனைத்தும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. உயிரிழந்த மக்கள் உடல்களை மேலும் சிரமத்திற்கு ஆளாக்காத வகையில் மயானங்கள் பசுமையாக, தூய்மையாக, நேர்த்தியாக பராமரிக்கப்பட வேண்டும்.

இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் “பசுமை மயானங்கள் மற்றும் சுடுகாடுகளை” அமைக்கும் திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது. மயானம் மற்றும் சுடுகாடுகள் முறையாக பராமரிக்கப் படவில்லை. அங்கெல்லாம் அடிப்படை வசதிகள் கூட இல்லை. சுகாதாரமின்றி தூய்மையற்றதாக மயானங்களாகவே அவைகள் காணப்படுகின்றன.

மயானத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்து, பூச்செடிகள் மற்றும் மரங்களை நட்டு , தண்ணீர் வசதி மற்றும் கொட்டகை அமைத்து “பசுமை மயானங்களை” உருவாக்கலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் இரண்டின் பிம்பத்தையும் மேம்படுத்த இது பெரிதும் உதவும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

 அத்துடன், இந்த மயானங்கள் பசுமை திட்டம் முன்னெடுத் தால், அதனால் ஏற்படக்கூடிய சுற்றுப்புறசூழல் நன்மைகள் குறித்தும் பல்வேறு விஷயங்களை அதில்   தலைமை செயலாளர் இறையன்பு குறிப்பிட்டுள்ளார்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top