Close
நவம்பர் 22, 2024 1:25 மணி

புஷ்கரம் வேளாண் கல்லூரியில் உலக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை

புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் நடந்த போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில்  உலகபோதைப் பொருள்ஒழிப்பு தின விழிப்புணர்வுப்பேரணி (26.6.2023) நடைபெற்றது.

உலகபோதைப் பொருள் ஒழிப்பு தினம், ஒவ்வொருஆண்டும் ஜூன் 26 அன்றுபோதைப் பொருள் இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கொண்டாடப்படுகிறது.

புதுக்கோட்டையில்உள்ள புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மற்றும் புதுக்கோட்டை  மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு  இணைந்து உலக போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.

இந்தப் பேரணியை புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் தொடங்கி வைத்து பேசியதாவது:  போதைப் பொருள் பிரச்சனை என்பது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒருசிக்கலான பிரச்னையாகும்.

போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பலர்பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர், இது அவர்களின் உடல் மற்றும் மனஆரோக்கியத்திற்கு மேலும் தீங்கு விளைவிக்கும். போதைப் பொருள் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேசதினம் அல்லது உலகபோதைப் பொருள் ஒழிப்பு தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26 அன்று போதைப் பொருள் இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தக் கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு பேரணியின் நோக்கம் போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களை மரியாதையுடனும் அனுதாபத்து டனும் நடத்துதல்; அனைவருக்கும் தன்னார்வ சேவைகளை வழங்குதல்; தண்டனைக்கு மாற்று வழிகளை வழங்குதல்; போதைப்பொருள்தடுப்புக்கு முன்னுரிமை அளித்தல்; மற்றும் இரக்கத்துடன் வழிநடத்தஉதவுதல் ஆகியவையாகும். என்றார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்பிரபாகரன்

பேரணியில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் கல்லூரிக்கு வந்த புதுக்கோட்டைவனப்பாதுகாவலர்திரு. எம். சதாசிவம்

உலகபோதைப் பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி (26.06.2023) புதுக்கோட்டை வனப் பாதுகாவலர் எம். சதாசிவம் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி வளாகத்திற்கு வந்து  அனைத்து விவசாய நிலங்களுக்கும் சென்று பார்வையிட்டு பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top