Close
செப்டம்பர் 20, 2024 5:56 காலை

தவ்ஹீத் ஜமாத் சார்பில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் நகர கிளை சார்பில் அடப்பன் வயல் பகுதியில் மதராசா பரிசளிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் நகர கிளை சார்பில் அடப்பன் வயல் பகுதியில் மதராசா பரிசளிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்  நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் குளம் முகமது பாட்ஷா தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநிலத் தலைவர் எம். எஸ். சுலைமான்பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் கல்வி வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மூன்று சதவீத இட ஒதுக்கீடு முறையாக பல துறைகளில் வழங்கப்படுவதில்லை.

மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை .ரோஸ்டர் முறையில் சரியான வரிசை முறைப்படி இஸ்லாமியர்கள் பயன் பெற முடிவதில்லை. இஸ்லாமியர்களின் சதவீதத்தோடு ஒப்பிடுகையில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு குறைவு. இதில் பல குளறுபடி உள்ளது .

தமிழக அரசு இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை அனைவரும் தெளிவாக அறியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைவரும் பயன்பெறும் வகையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் .

தமிழக சிறைவாசிகள் ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள் என்று விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவதில்லை.

மதத்தின் பெயரால் அவர்கள் மீது காட்டப்படும் இந்த வேற்றுமை இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆதிநாதன் ஆணையத்தின் அறிக்கை மீதான நடவடிக்கையை மாநில அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

மது குடிப்பதால்  குடும்பத்தினர் பலர் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை இன்று தமிழகத்தில் நிலை வருகிறது சமீபத்தில் விஷ்ணு பிரியா என்னும் பெண் தற்கொலை செய்து கொண்ட இறந்துவிட்டார்.

குடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்னும் போது அதை முற்றிலும் ஒழிக்க இதுவரை அரசு எந்த செயல் திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. கள்ளச் சாராயத்தை தடுக்க கூடிய அனைத்து வழிமுறைகளையும் அரசு நிறைவேற்றி பூரண மதுவிலக்கை அமல் படுத்த  வேண்டும்  என்றார்.

கூட்டத்தில் பேச்சாளர்கள் சுஜா அலி, அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top