Close
நவம்பர் 22, 2024 9:16 காலை

புதுக்கோட்டையில் புதுப்பிக்கப்பட்ட பூமாலை வளாகம் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பூமாலை வணிக வளாத்திறப்பு விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் செயல்படும்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில்

புதுக்கோட்டையில்புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர்  காணொலிக்காட்சி வாயிலாக  (28.06.2023) திறந்து வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின்கீழ் செயல்படும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், புதுக்கோட்டையில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகத்தினை திறந்து வைத்தார்கள்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா கலந்து கொண்டார்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் ஊரகப் பகுதியில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகரப் பகுதிகளில் விற்பனை செய்ய ஏதுவாக மாவட்ட அளவிலான முதன்மை விற்பனை வளாகமும், தேவையின் அடிப்படையில் கூடுதல் வணிக வளாகங்களும், பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டன. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  இவ்வணிக வளாகங் களுக்கு ‘பூமாலை வணிக வளாகம்” எனப் பெயர் சூட்டி திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் , பூமாலை வணிக வளாகங்களை புனரமைத்து, பழுதுநீக்கம் செய்து, ஒரே மாதிரியான வண்ணம் பூசிட உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதுக்கோட்டையில் ரூ.24 இலட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு  பூமாலை வணிக வளாகம்   காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா , நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, புதுக்கோட்டை ஒன்றியக் குழுத்தலைவர் .பி.சின்னையா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top