Close
நவம்பர் 22, 2024 3:32 காலை

சென்னை திருவான்மியூர் சாலையோர சிற்றுண்டி நிலையத்தில் இங்கிலாந்திலிருந்து சங்கர்…

தமிழ்நாடு

சென்னை சாலாயோர உணவகத்தில் தோசை வார்க்கும் சங்கர்

சென்னை திருவான்மியூர் சாலையோர சிற்றுண்டியில் நான்(இங்கிலாந்திலிருந்து சங்கர்)..,

கடந்த மூன்று நாட்களாக இங்கு தான் காலை உணவு. பல நட்சத்திர உணவகங்களில் சாப்பிட நேர்ந்திருந்தாலும், இந்த சுவைக்கு ஈடு இல்லை.மத்திய தர வர்க்கத்திற்கான உணவகம் என்பதில் எந்த மாற்று கருத்து இல்லை. மலிவான விலை. தரமான உணவு. சுற்றுப்புறத்தை தூய்மையுடன் வைத்துக் கொண்டு தனது இரு பட்டதாரி மகன்களுடன் இந்த உரிமையாளர், கடையை 15 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகிறார்.

இன்று அவர் சுட்டதோசையை சாப்பிட்டதுடன், அவருடன் தோசை சுட்டது இனிமையான அனுபவம்.

சாலையோரக் கடைகளில் அதிகக் கூட்டம் இருப்பதை எல்லா ஊர்களிலும் பார்க்கலாம். காரணம் விலை குறைவாக இருக்கும் என்பதை தாண்டி எனக்கு சில காரணங்களும் தெரிகிறது. சாலையோரக் கடைகளில் பொதுவாக, உணவுகள் மிஞ்சுவதில்லை,

அன்றைய தினத்திற்கு போதுமான அளவிற்கு தயார் செய்து காலி செய்து விடுவதால் பழைய உணவுகள் மிஞ்சுவதில்லை. விலையும் பெருமளவில் குறைவாக உள்ளது. பெரிய உணவகங்களில் பெரும்பாலும் நேரம் அதிகமாகிறது.அவசர யுகத்தில் வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் என்கிற மன நிலையில் தான் நகரவாசிகள்.

இது போன்ற கடைகளில் சாலையில் செல்லும் வாகனங்க ளின் புகை மற்றும் வாகனங்கள் கிளப்பி விடும் தூசிகள் என ஆரோக்கியக் கேடு இருப்பதையும் நாம் மறுக்க முடியாது.

வீட்டில் சமைத்து கடைக்கு எடுத்து வருகிற வரை உணவுப் பொருட்களை சரியான முறையில் ஆரோக்கியமானசூழலில் சுகாதாரமுறைப்படி கையாண்டு சமைக்க வேண்டும் என்கிற மன நிலை இந்த சாலையோர கடைக்காரகளுக்கு சற்று கூடுதலாக தான் இருக்கிறது. அவர்களும் நம்மோடு அந்த உணவை தான் உண்கின்றனர் என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு

தெருக்களும் சாலைகளும் உணவுக் கடைகளை அமைப்ப தற்காக அல்ல. போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட்ட வை, அது தொழில் புரிவதற்கான களமாக இருப்பதை இங்கு பலர் ஏற்பதில்லை. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடைபாதைகளை மறைத்து விடுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின் றனர். வாகனங்கள் சாலைகளைக் கடந்து செல்வதற்காக உருவாக்கப்பட்ட சாலைகளில் மக்கள் நடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல சமயங்களில் பெரும் விபத்துகளுக்கு காரணமாகிறது.

சாலைகளிலும் தெருக்களிலும் தெருக் கடைகளை அரசு அனுமதிக்கவில்லை என்பது சரிதான். மக்கள் இந்தியாவின் தெருக்களிலும் சாலைகளிலும் கடைகளை வைத்து தங்கள் வியாபாரத்தை செய்கிறார்கள். இதற்கு பின்னால், பல சமூக பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசியல் காரணங்கள் உள்ளன.

இது தான் வாழ்வாதாரம் என்கிற நிலையில் அதன் மூலம் வருமானம் ஈட்டுகிற சாராசரி மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்காத வரை, தெருக்கடைகளின், பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அது இந்த யுகத்தில் நடப்பதாக இல்லை. அதுவரை நாம் இதுப்போன்ற கடைகளில் சாப்பிடுவோம். நமக்கு உணவளிப்பவர்களின் வாழ்வாதாரத்திற்கு குறைந்தபட்ச ஆதாரமாக இருப்போம்.

# சென்னையிலிருந்து..(இங்கிலாந்து) சங்கர் 🎋 #

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top