Close
செப்டம்பர் 20, 2024 3:38 காலை

பிஎம் கிசான் (PM – KISAN) திட்ட பயனாளிகள் 14வது தவணை பெற KYC பதிவு செய்ய வேண்டும்: தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர்

பிஎம் கிஸான் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிஎம் கிசான் (PM – KISAN) திட்ட பயனாளிகள் 14 -வது தவணை பெற KYC பதிவு செய்ய வேண்டுமென விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்க ளுக்கு ஒருமுறை 2000 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.  இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ளது. 14 வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் ஜூன் 30ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதை செய்தால் தான் 14வது தவணை ஊக்கத் தொகை வழங்கப்படும். இதே போல் வங்கிகணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அருகில் உள்ளஅஞ்சல் நிலையங்களை அனுகி வங்கி கணக்கு துவங்கி 14வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.

முதல் வழிமுறையாக ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள்pmkisan.gov.inஎன்ற இணையத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச் சொல் (OTP) மூலம் சரிபார்க்கலாம் .ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலை

தளத்தில் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.இ-கே.ஒய்.சி பதிவு செய்திடாத விவசாயிகள் விவரங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்ற தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top