நலவாரிய கூட்ட முடிவின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென ஏஐடியூசி கட்டுமான சங்கம் வலியுறுத்தல்.
தஞ்சையில் நடைபெற்ற ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் சங்கத் தலைவர் ரெ.சேகர் தலைமையில் நடைபெற்றது .
கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் நடைபெற்ற பணிகள் குறித்து பேசினார். சென்னையில் நடைபெற்ற நலவாரிய பிரதிநிதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தை உயர்த்தி 2000 மாக வழங்குவது என முடிவு செய்யப்பட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
நலவாரியத்தில் பதிவு செய்து ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான தொழிலாளர் மரணம் அடைந்தால்அவர்களுக்கு ஈமச்சடங்கு நிதி உதவி வழங்க வேண்டும், வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தொழிலாளர்கள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அமல்படுத்த வேண்டும்.
மோடி அரசை கண்டித்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி சென்னையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
கூட்டத்தில் சங்க துணைத் தலைவர் ஜெ.பாலசுப்பிர மணியன், துணைச் செயலாளர்கள் சீனி. சுகுமாரன்,, பி.செல்வராஜ், நிர்வாகிகள் எஸ்.பரிமளா, என். காளிதாஸ் எஸ்.ரங்கசாமி,. எஸ் குமார் மற்றும் ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் தி.கோவிந்தராஜன், மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் ஆகியோர் பங்கேற்றனர்