Close
நவம்பர் 22, 2024 8:29 காலை

புதுக்கோட்டையில் கேஎஸ்சி வெல்பேர் அசோசியேசன் சார்பில் விருது வழங்கல்

புதுக்கோட்டை

தமிழ்நாடு சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்

புதுக்கோட்டையில்அமைச்சர் எஸ் ரகுபதி  மாணவர்களை பாராட்டி  விருதுகள் வழங்கினார்                                                                                                                                                                                                  புதுக்கோட்டையில் கேஎஸ்சி வெல்பேர் (welfare) அசோசியேசன் விருது வழங்கும் நிகழ்ச்சி சாரதா கூட்ட அரங்கில் நடைபெற்றது
விழாவில்  2022–2023 ஆம் ஆண்டு பத்தாம்  வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும்,   விந்தன் ஸ்டாலின்சிறந்த ஒளிப்பதிவாளராக விருது பெற்றதற்கும்   பாராட்டி விருது வழங்கும்   நிகழ்ச்சி  நடைபெற்றது.
விழாவிற்கு ஏ பழனியப்பன்  தலைமை  வகித்தார், நிர்வாகிகள் என் எஸ் கிருஷ்ணமூர்த்தி, எஸ்எம் சுப்பையன், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எல் கணேசன் வரவேற்று பேசினார்.
தமிழ்நாடு சட்டம் மற்றும்  சிறைத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவி 600 க்கு 571 எடுத்த மாணவி கே அகிலா மகாலட்சுமி, 600 க்கு 564  பெற்ற மகிளேஸ்வரி நீலகண்டன்.
 600 க்கு 562 பெற்ற கவி கீர்த்தனா எஸ் 500க்கு 475 மார்க் பெற்ற கே ஹரிணிக்கும் 500க்கு 471 மார்க் பெற்ற எஸ் கீர்த்தனாவுக்கும் 500க்கு 450 பெற்ற லாவண்யா ஆகிய மாணவர்கள் மாணவிகளுக்கும் விளையாட்டுத் துறையில்விளையாட்டுத் துறைகளில் சாதனை பெற்றதற்காக சிறுவர் சிறுமிகளுக்கும்,
சிறந்த ஒளிப்பதிவாளராக  விருதுபெற்ற விந்தன் ஸ்டாலின் ஆகியோர்களை பாராட்டி பதக்கம் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் நிர்வாகிகள் நிர்வாகிகள்  ஏ பழனிப்பன் எல் கணேசன் குணாநிதி மற்றும் எஸ் திருநாவுக்கரசு எஸ் பி பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக கணேசன் நன்றி  கூறினார்.  நிகழ்வில் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top