Close
செப்டம்பர் 19, 2024 10:59 மணி

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவு படுத்தாவிடில் விவசாயிகளை திரட்டி போராட்டம்: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர் முனை இளைஞர் அணி -- காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு சங்கம்,இணைந்து நடத்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவு படுத்தாவிட்டால் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ  கூறினார்.                                                                                                                                                                                                                                புதுக்கோட்டையில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர் முனை இளைஞர் அணி – காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு சங்கம் இணைந்து நடத்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு நகர்மன்ற வளாகத்தில் (5.7.2023)  நடைபெற்றது.
மாவட்ட தலைவர் எம்.ரவி தலைமை வகித்தார். செயலாளர். கே.நடராஜன் வரவேற்புரையாற்றினார் .
மாநாட்டில் முன்னாள் சுகாதார துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை ரூ.14 ஆயிரம் கோடியில் நிறைவேற்ற முதற்கட்டமாக ரூ.7 ஆயிரம் கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் பட்ஜெட்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கப் பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட  டெண்டர் பணிகள் தான் இன்றளவும் ஆமை வேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
புதுக்கோட்டை
விவசாயிகள் சங்க மாநாட்டில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நினைவுப்பரிசு வழங்கும் விவசாயிகள்
இதை விரைவுபடுத்த அமைச்சர்கள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும். முதல்-அமைச்சராக இருந்த காமராஜர், எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இத்திட்டத்தை கொண்டு வர எண்ணினார்கள். இதனை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார்.

இத்திட்டத்தை விரைவுப்படுத்தாவிட்டால் 7 மாவட்ட விவாசாயிகளை திரட்டி விரைவில் போராட்டம் நடத்தப்படும். என்றார் விஜயபாஸ்கர். மாநாட்டில் விவசாயிகள் பல்வேறுமாவட்ட  சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சி.பழனியாண்டி நன்றிகூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top