Close
நவம்பர் 24, 2024 8:16 காலை

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் “புதுக்கோட்டை வாசிக்கிறது”

புதுக்கோட்டை

புதுகை வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் முதல்வர் தங்கம்மூர்த்தி தலைமையில் நடைபெற்ற

புதுக்கோட்டைதிருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வு நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழா(2023) வை முன்னிட்டு;  வரவேற்புக் குழுத் தலைவர் மாவட்டஆட்சியர் தலைமையில் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் பங்கேற்கும் “புதுக்கோட்டை வாசிக்கிறது”என்ற நிகழ்வு  6-07-2023 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை நடைபெற்றது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து, பள்ளி நூலகத்திலிருந்து எடுத்து வரப்பட்ட கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் போன்றசங்க இலக்கியங்கள், பாரதி, பாரதி தாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், கண்ணதாசன் கவிதைகளையும், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கந்தர்வன் சிறுகதைகளையும் சிறுவர் கதை களஞ்சியம்போன்ற தங்களுக்குப் பிடித்தமான நூல்களை ஆர்வமுடன் வாசித்தனர்.

பள்ளிமுதல்வரும், புதுக்கோட்டை புத்தகத்திருவிழா ஒருங்கி ணைப்புக்குழு உறுப்பினருமான கவிஞர் தங்கம்மூர்த்தி கூறும்போது:

புதுக்கோட்டை

முதல் முறையாக புத்தகத் திருவிழா புதுக்கோட்டையில் தொடங்கிய ஆண்டிலிருந்து புதுக்கோட்டை வாசிக்கிறது நிகழ்வில் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்கிறார்கள். ஆயிரக்கணக்கானமாணவர்கள் ஓரிடத்தில் ஒன்றாக அமர்ந்து விரும்பிய நூல்களை வாசித்தார்கள். பள்ளிமாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டிபொதுவான நூல்களை வாசிப்பதால் மட்டுமே வாழ்க்கைக்குத் தேவையானஅறத்தை, அறிவை,  சான்றோர்களின் அனுபவங்களை அறிந்துதெளிவு பெறமுடியும்.  இளமையில்கல்என்றவாக்கிற்கிணங்கவாசிக்கும்பழக்கத்தைஅறிய, நூல்களைநேசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த “புதுக்கோட்டைவாசிக்கிறது” நிகழ்வு பெரிதும் உதவுகிறது என்று குறிப்பிட்டார்.  இந்தநிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலெட்சுமி, கோமதி, மேலாளர் ராஜா, ஆசிரியர்கள் காசாவயல் கண்ணன், உதயகுமார், செல்வராஜ், ராமன் உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன், விசாலி மற்றும் பெரும்பாலான ஆசிரியகளும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top