புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணத்தை சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி நடத்தி வைத்தார்.
புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் 5 இணைகளுக்கான திருமணங்களை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி (07.07.2023) தலைமை வகித்து நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில், சட்ட அமைச்சர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பொதுமக்களின் பொருளாதாரம் உயரும் வகையில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறையில் சார்பில் திருக்கோயில்களில் ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த மணமக்களுக்கு திருமணங்கள் நடத்தி, சீர்வரிசை பொருட்களை வழங்கிட உத்தரவிட்டார்.
அதன்படி வெள்ளிக்கிழமைபுதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில், 5 இணைகளுக்கான திருமணங்களை நடத்தி வைத்து, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த மணமக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளார்.
எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை உரிய முறையில் பயன்படுத்தி, தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) தி.அனிதா, கோயில் செயல் அலுவலர் ச.முத்துராமன், மேற்பார்வையாளர்கள் தெட்சிணாமூர்த்தி, .வைரவன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்;