Close
நவம்பர் 21, 2024 7:08 மணி

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வன மகோத்சவ வார விழா

புதுக்கோட்டை

கொத்தகப்பட்டி நடுநிலைப் பள்ளியில் வன மகோத்சவம் வார விழாவை முன்னிட்டு மரக்கன்று நடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கொத்தகப்பட்டியில் வன மகோத்சவம் வார விழா கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கலைமணி அனைவரையும் வரவேற்றார்.வார்டு உறுப்பினர் திருப்பதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வக்கோட்டை வட்டாரத் தலைவர் ரகமதுல்லா கலந்து கொண்டு பேசியதாவது

ஒவ்வொரு வருடமும் ஜூலை முதல் வாரம் வன மகோத்சவம் கொண்டாடப்படுகிறது. இது வனங்களுக்கான திருவிழா வனங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்பதை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் நினைவூட்டும் ஒரு கொண்டாட்டம்.
வனம் என்றால் காடு, மகோத்சவம் என்றால் திருவிழா காடுகளைக் கொண்டாடும் ஒரு திருவிழா என்ன பொருள்படும்.

1950 ஆம் ஆண்டில் மத்திய வேளாண் மற்றும் உணவு அமைச்சராக இருந்த டாக்டர் கே .எம் .முன்ஷியால்  ஜூலை முதல் வாரம் மரங்களை கொண்டாடும் வாரமாக தொடங்கி வைக்கப்பட்டது.

அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி மரங்களை நட்டு கொண்டாடும் வாரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள வன வளங்களை பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் இதன் அடிப்படை நோக்கமாகும்.

இதற்காக மரங்களை நடுவதன் முக்கியத்துவத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்குவது, நாடு முழுவதும் பல்வேறு வகையான மரங்களை பொதுமக்கள் நடவு செய்ய ஊக்குவிப்பது என பல்வேறு நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்தியர்களை மரம் நடும் மற்றும் பராமரிப்பை ஊக்குவிப் பதன் மூலம், திருவிழா அமைப்பாளர்கள் நாட்டில் அதிக காடுகளை உருவாக்க விரும்பினார்கள். இது மாற்று எரிபொருட்களை வழங்குகிறது.

உணவு வளங்களின் உற்பத்தியை அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரிக்க வயல்களைச் சுற்றி தங்குமிடங்களை உருவாக்கும். கால்நடைகளுக்கு உணவு மற்றும் நிழலை வழங்குகிறது.

நிழல் மற்றும் அலங்கார நிலப்பரப்புகளை வழங்குகிறது. வறட்சியைக் குறைக்கிறது. மேலும், மண் அரிப்பைத் தடுக்க உதவுகிறது. சூலை முதல் வாரம் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மரங்களை நடுவதற்கு சரியான நேரமாகும்.

ஏனெனில் அது பருவமழையுடன் ஒத்துப்போகிறது.என்று பேசினார்.தற்காலி ஆசிரியர் சிவதீபன்,திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top