Close
செப்டம்பர் 20, 2024 5:56 காலை

போலந்து நாட்டு பெண்ணை கரம்பிடித்த புதுக்கோட்டை இளைஞர்..!

புதுக்கோட்டை

போலந்து நாட்டு பெண்ணை கரம் பிடித்த புதுக்கோட்டை இளைஞர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞருக்கும்  போலாந்து நாட்டு  பெண்ணுக்கு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பூசத்துறை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்- புவனேஸ்வரி தம்பதியினர் பாலகிருஷ்ணன் திருச்சி பகுதியில் கைக்கடிகாரங்கள் பழுது பார்க்கும் கடையை வைத்து நடத்தி வருகிறார் இவரது மகன் அருணகிரி என்கின்ற அருண் பிரசாத் 22 வயதில் எம்பிஏ படித்துவிட்டு போலாந்து நாட்டில் வேலைக்காக சென்றார்.

அங்கு பணிக்கு சேர்ந்த சிறிது காலத்தில் தனியாக கார்களை வாடகைக்கு விடும் டிராவல் ஏஜென்சியை தொடங்கி  நடத்தி வருகிறார்.  இந்த நிலையில் அவரது டிராவல் ஏஜென்சிக்கு  பணி நிமித்தமாக அடிக்கடி வந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்டோஃப் ரில்ஸ்கி -மஷேனா போசனா தம்பதியரின் மகள் ஹனியா என்கின்ற அன்னாரில்ஸிகா என்ற பெண்ணுடன்  பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம்  நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து காதலர்கள் (அருண் பிரசாத்- ஹனியா)  இருவரும் திருமணம்  முடிவு செய்து, போலாந்து நாட்டில் சட்டமுறைப்படி நிச்சயம் செய்து கொண்டனர்.

இந்நிலையில்   உறவினர்களிடம் அருண்குமார்  தனது திருமணம் குறித்து தகவல் கூறியுள்ளார்.  அருண்குமார் பெற்றோர் தமிழ்நாட்டில்  இந்து காலாசாரப்படி தமிழ் முறைப்படி திருமணம் நடத்த வேண்டுமென வலியுறுத்தினர் இந்தியா கலாசாரம் மற்றும் இந்து மத நம்பிக்கை கொண்ட ஹனியாவும் இந்தியாவுக்கு வந்து  திருமணம் செய்து கொண்ட ஒப்புக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து, இருவருக்கும்  திருமணம் நடத்த பெற்றோர் ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி புதுக்கோட்டை அன்னவாசல் செல்லும் சாலையில் உள்ள செல்லுக்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (9.7.2023)  கோலகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டு அருண் பிரசாத்- ஹனியா தம்பதிகளை வாழ்த்தினர்.  தான் காதலித்த வெளிநாட்டுப் பெண்ணை கைவிட்டு விடாமல் கரம் பற்றிய தமிழ் இளைஞருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top