Close
நவம்பர் 22, 2024 12:42 காலை

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம்.. நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஐக்கிய விவசாயிகள் முன்னணி மனு

தஞ்சாவூர்

தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திடம் மனு அளித்த ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டுமெனக் கோரி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரிடம்  மனு அளிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி தலைநகரில் விவசாயிகள் ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு மேலாக பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு உறுதியான போராட்டத்தை நடத்தியதன் விளைவாக ஒன்றிய மோடி அரசாங்கம் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியது.

அதில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் படி மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்தல், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், மின்சார சட்ட திருத்த மசோதா திரும்ப பெறுவது, டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறுதல், போராட்ட காலத்தில் இறந்து போன விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட எந்த ஒரு கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு நிறைவேற்ற வில்லை‌.

இக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி , ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அவர்களிடம் மனு அளிப்பது என்கின்ற முடிவை ஏற்று, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் மு.சண்முகம்,. எஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டவர்களிடம் ஐக்கிய விவசாயிகள்முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் என்.வி.கண்ணன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வீரமோகன், பி.செந்தில்குமார், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சு.பழனிராஜன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன்,சிபிஎம்எல்மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாச்சலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி, துணை செயலாளர் கோ.சக்திவேல், சோ.பாஸ்கர், பூபேஸ்குப்தா, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top