Close
ஏப்ரல் 5, 2025 11:48 மணி

புதுக்கோட்டைஸ்ரீ ஆண்டாள் ரெங்க மன்னார் திருக்கோயி லில் ஆடிப்பூர உற்சவம்

புதுக்கோட்டௌ

ஆண்டாள் ரெங்க மன்னார் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம்

புதுக்கோட்டைஸ்ரீ ஆண்டாள் ரெங்க மன்னார் திருக்கோயி லில் ஆடிப்பூர உற்சவம் பத்து நாள் நடைபெறுகிறது

புதுக்கோட்டை நகர் மேல  இரண்டாம் வீ தி தெற்கு ராஜவீதி சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் ரெங்க மன்னார் திருக்கோயிலில் ஆடிப்பூர உற்சவம்  சிறப்பாக பத்து நாள் நடைபெறுகிறது

முதல் நாள் தொடக்கமாக ஆலயத்தில் உள்ள மூலவர்  ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அபிஷேகங்கள்  தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற நிகழ்வில்  ஊஞ்சலில்  ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீ சமேத ஆண்டாள் மூலவர் மலர்  அலங்காரத்தில் தீபாரதனை நடைபெற்றது.

நிகழ்வில் கல்யாணராமன் பட்டாச்சாரியார், உதவி பட்டாச்சாரியார் ரங்கநாதன் மற்றும்  கண்ணன் ஐயங்கார், பார்த்தசாரதி மாதவ ராமானுஜ ஐயங்கார், பார்த்தசாரதி ஐயங்கார் ஆகியோர் முன்னிலையில்   நாலாயிரத்து  திவ்ய பிரபந்தபாராயணம்  சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிறைவில்  உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி ஆண்டாளுக்கு மகாதீபாரதனை நடைபெற்றது .இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

ஆடிப்பூரவிழா  பத்து   நாட்களும் தொடர்ந்து இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது  பக்தர்கள் திரளாக தினமும் கலந்து கொள்ள விழாக் குழுவின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top