Close
நவம்பர் 22, 2024 4:54 காலை

சந்திராயன்-3 விண்கலம்…விண்ணில் வெற்றிகரமாக பறந்த நிகழ்வை நேரலையில் பார்த்து மகிழ்ந்த மாணவர்கள்

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வராபள்ளியில் சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்ட நேரலை நிகழ்வை கண்டுகளித்த மாணவர்கள்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விண்ணில் பாய்ந்த சந்திராயன் – 3 நிகழ்வை நேரலையில் கண்டு மகிழ்ந்தனர்.

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வர் கவிஞர் தங்கமூர்த்தியின் அறிவுறுத்தலின் படி, மாணவர்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் – 3 நிகழ்வை பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் உள்ள ஸ்மார்ட் போர்டுகளில் மூலம் கண்டுகளித்தனர்.

புதுக்கோட்டை
சந்திராயன்-3 விண்கலம் ஏவப்பட்ட நிகழ்வை நேரலையில் பார்க்கும் மாணவர்கள்

பள்ளியின் மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, இது பற்றிக்கூறும் போது, பாடப்புத்தகங்களை தாண்டி மாணவர்களுக்கு உலக நடப்புகளை அறிவியல் நிகழ்வுகளை உடனுக்குடன் வகுப்பறைகளில் காட்சிப்படுத்துவதால் வகுப்புக் கல்வியோடு, அறிவியல் அறிவையும் பல்வேறு பொது அறிவையும் வளர்த்துக்கொள்ள ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் துணை முதல்வர் குமாரவேல், ஒருங்கிணைப் பாளர் அபிராம சுந்தரி, வரலெட்சுமி, மேலாளர் ராஜா, ஆசிரியர் உதயகுமார் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்க ளும் கலந்துக்கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top