Close
செப்டம்பர் 20, 2024 3:33 காலை

ஸ்ரீவெங்கடேஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழா

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் காமராசர்பிறந்தநாள்விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள்விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியின்ஆலோசகர் கவிஞர்அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி காமராசர் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி நிகழ்வை தொடக்கி வைத்தார். மேலாண்மை இயக்குனர் நிவேதிதாமூர்த்தி விழாவுக்கு தலைமை வகித்து பேசியதாவது:   காமராசர் போன்றதலைவர்களின் தியாக வரலாறுகள் நமக்குமறுபடி மறுபடி நினைவில் நிறுத்தப்பட வேண்டும்என்பதற்காகத்தான்.ஒவ்வொருஆண்டும்நம்பள்ளியில் இந்தவிழாவினை தவறாமல்நடத்துகின்றோம்.

ஏதோவிழா என்றார்கள் உட்கார வைத்தார்கள் மிட்டாய் கொடுத்தார்கள் என்றில்லாமல் ஒவ்வொரு குழந்தைகளும் நிகழ்வைஆர்வமுடன்கவனித்தீர்கள் .அதுவே உங்களின் எதிர்காலம் சிறப்பாய் அமையும் என்பதை காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மகாத்மாரவிச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார் .கருப்புகாந்தியின் பொறுப்பான செயல்பாட்டை விளக்கும்இன்னிசைபாடல் ஒன்றும் இனிப்பான தமிழ்பேச்சு ஒன்றும் கிங்மேக்கர்பற்றிய ஆங்கிலஉரையொன்றும் பள்ளி மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

காமராசர் வாழ்க்கை பற்றிய பாடல் ஒன்று காசாவயல் கண்ணன்பாடினார்.காமராசர் பிறந்தநாள் விழா வினாடி வினா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முன்னதாகஆசிரியர்கணியன்செல்வராஜ்வரவேற்கநிறைவாக துணை முதல்வர் குமாரவேல் நன்றிகூறினார். விழாவில் ஒருங்கிணைப்பளர்கள் அபிராமசுந்தரி, வரலெட்சுமி, மேலாளர்ராஜா, ஆசிரியர்கள் உதயகுமார், ராமன், உடற்கல்வி ஆசிரியர்கள் நீலகண்டன்,  விசாலி, சரசு மற்றும் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர். விழாவினை ஒருங்கிணைப்பாளர் கோமதிபிள்ளை தொகுத்துவழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top