பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 35 ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 35 -ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மருத்துவர் ராமதாஸ் மற்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் கந்தர்வகோட்டை பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து வெள்ளை முனீஸ்வரர் ஆலயத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கட்சி கொள்கைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக உழைப்பது.
பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்ய வேண்டும். கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையை விரிவுபடுத்தி மருத்துவர்கள் அதிகப்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் மது விற்பதை தடை செய்யவேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றி சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி நவீன கழிப்பிட வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பாமக வடக்கு மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கருப்பையா, நகரச் செயலாளர் சுரேஷ், ஒன்றிய துணை செயலாளர் கார்த்திக், மற்றும் திருப்பதி சக்திவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் புதிய நிர்வாகிகளும் ஏராளமான கலந்து கொண்டனர்.