புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள்புரத்தில் அமைந் துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் விமரிசையாக நடைபெற்றது.
புதுக்கோட்டை திருவப்பூர் அன்னம்மாள்புரத்தில் அமைந்துள்ள புனித அன்னம்மாள் ஆலயத்தின் திருவிழா வருகின்ற 25 -ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது.
அதனை யோட்டி இன்று கொடியேற்றம் நிகழ்ச்சி விமரிசியாக நடைபெற்றது. முன்னதாக புனித அன்னம்மாளின் திருவுருவம் வரையப்பட்ட கொடி ஊர்வலம் அன்னம்மாள் புரத்தில் இருந்து புறப்பட்டு பெரிய தெரு, திருப்பூர் வழியாக சுற்றி மீண்டும் அன்னம்மாள் புரத்தில் உள்ள ஆலயம் வந்தடைந்தது.
இதனைத் தொடர்ந்து எஸ்.எப்.எஸ் பள்ளி அருட்தந்தையர்கள் ஜான் ததேயூஸ், மரிய புஷ்பம், நாயக சீலன் ஆகியோர் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் புனித நீர் தெளித்து அன்னை பாடல் பாடியும் வான வேடிக்கை முழங்க கொடி ஏற்றம் நடைபெற்றது.
இதனை அடுத்து அனைவரும் கண்களை கவரும் வகையில் கொடி கம்பம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. இந்த கொடியேற்றம் விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.