Close
மே 23, 2025 8:10 மணி

தமிழகத்திலிருந்து காணாமல் போன பத்தில் ஒரு மடங்கு சிலை தான் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல்

தமிழகத்திலிருந்து காணாமல் போன பத்தில் ஒரு மடங்கு சிலை தான் தற்போது வரை மீட்கப்பட்டுள்ளது. 165 தொன்மை வாய்ந்த கோவில்கள் பராமரிக்க முடியாமல் அழிவுற்ற நிலையில் உள்ளது.

தமிழகத்தில் எந்தெந்த தொன்மை வாய்ந்த கோயில்கள் அரசால் பராமரிக்க முடியவில்லையோ அவற்றை விட்டு அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.

தேர்தலுக்கு முன்பு ஜனநாயக வாதியாக உள்ள அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின் அமைச்சர் உள்ளிட்ட பதவிகளில் அமர்ந்தவுடன் அமைச்சர்கள் சர்வாதிகாரிகளாக மாறிவிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும். தமிழக காவல்துறையில் சாட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் பொய் சாட்சிகளை நம்பி காவல்துறை செயல்படுகிறது, எனது ஆலோசனைகளை தமிழக அரசு ஏற்பதில்லை. ஏற்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றார் முன்னாள் காவல்துறை ஐஜி பொன்-மாணிக்கவேல் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top