Close
நவம்பர் 22, 2024 1:17 மணி

மோசமான நிலையில் மனநலக் காப்பகம்… இணை இயக்குநர் இடைநீக்கம், மருத்துவ அலுவலர் இடமாற்றம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி

புதுக்கோட்டை

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(பைல் படம்)

புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெறும் பட்டமளிப்பு விழா உள்பட  பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்  செவ்வாய்க்கிழமை  (18.07.2023) புதுக்கோட்டைக்கு வருகை தந்தார்.
பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, விராலிமலை தொகுதிக்குள்பட்ட அன்னவாசல் அரசு வட்டார மருத்துவமனைக்கு அதிகாரிகளுடன் ஆய்வுக்கு சென்றார். அப்போது, அந்த வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனப் பராமரிப்பில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லத்தை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, அன்னவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்ப டுகிறதா என்பது குறித்தும், மருத்துவர்கள் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருகை புரிகின்றனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அங்கு இயங்கி வரும் மனநல காப்பகத்தை ஆய்வு செய்த  அமைச்சர்  அங்கு சிகிச்சை பெற்றுவந்த 59 நபர்க ளுக்கு சரிவர சிகிச்சை, உணவு, இருப்பிடம், சுகாதாரம்வழங் காததை கண்டு மருத்துவ சேவை வழங்கி வரும் ரெனேசன்ஸ் நிறுவனத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டார்.
இதனையடுத்து  அன்னவாசல் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதித்தநோயாளிகளுக்கு சரிவர சிகிச்சை வழங்காததை ஆய்வு செய்ய தவறிய இணைஇயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.இராமு துறை
ரீதியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்து  அமைச்சர்  உத்தரவிட்டார். மேலும் அன்னவாசல் தலைமை மருத்துவர் சரவணன்  பணியிட மாற்றம் செய்யவும் உத்தரவிட்டார்.
மனநல காப்பகத்தில் உள்ள நோயாளிகளுக்கு தகுந்த முறையில்சிகிச்சை அளிக்கும் வகையில் இயக்குநர், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மூலம் 59 நபர்களையும் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிமருத்து வமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க  அமைச்சர்  மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர்  மா. சுப்பிரமணியன் கூறியதாவது: மனநலக் காப்பகம் வெறும் 3 சிறிய அறைகளைக் கொண்டு, சுமார் 59 பெண்களை வைத்திருக்கும் இடமாக இருந்தது. ஓர் அறையில் 3 பேர் தங்க வைக்கப்படலாம் என்ற நிலையில் 15 பேருக்கும் மேலானோர் ஒவ்வொரு அறையிலும்  தங்க வைக்கப்பட்டிருந்தனர். சுகாதாரமும் பேணப்படவில்லை. உணவும் சரிவர வழங்கப்படவில்லை  என அந்த இல்ல வாசிகள் தெரிவித்தனர்.
இந்த இல்லத்தை வழக்கமாக ஆய்வு செய்து கண்காணித்திருக்க வேண்டிய ஊரக நலப்பணிகள் இணை இயக்குநரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யவும், தலைமை மருத்துவ அலுவலரை இடமாற்றம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட அந்தத் தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருந்த உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
முன்னதாக, புதுக்கோட்டை நகராட்சி, காமராஜபுரம், நகர்ப்புற நலவாழ்வு மையத்தில்,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.மா.சுப்பிரமணியன்   (18.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , முன்னாள் அரசு வழக்கறிஞர் .கே.கே.செல்லபாண்டியன் , இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை தி.சி.செல்வவிநாயகம் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top