புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்) செவ்வாய்க் கிழமை (ஜூலை 18) மாலையில் நடைபெற்ற கம்பன் பெருவிழாவின் 5 -ஆவது நாள் நிகழ்வுக்கு அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில செயல்தலைவர் டாக்டர் இளமுருகு முத்து தலைமை வகித்து பேசினார்.
வைத்தீஸ்வரா மருத்துவமனை டாக்டர் எஸ். ராமதாஸ், நகர் மன்ற உறுப்பினர் ஜாபர் பர்வேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் க. மாதவன், உணவ உரிமையாளர்கள் சங்க செயலர் கே.ஜீ. ராஜா, அருட்பணி மருத்துவர் எஸ். ராமமூர்த்தி, மாவட்ட நுகர்வேர் சங்க தலைவர் லதாஉத்தமன், வீனஸ் ராஜேந்திரன்,
கல்வி அலுவலர்(ஓய்வு) சிவ. திருமேனிநாதன், பிரின்ஸ் லாட்ஜ் காதர்பாட்சா, விநாயகா பார்மா தி. குமார், பிரதோஷ வழிபாட்டு அமைப்பாளர் மல்லிகாவெங்கட்ராமன், பட்டுக்கோட்டையார் இலக்கியப் பேரவை தலைவர் செ. முகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இசைக்கலைமணி ராஜபாளையம் உமாசங்கர் கம்பன் எனும் இசைப்புலவன் தலைப்பில் இசையுரையாற்றினார். விழாக்குழு உறுப்பினர் அனுராதாசீனிவாசன் வரவேற்றார். தெய்வானை அறக்கட்டளை வள்ளியம்மை சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து இரவு 7 மணியளவில் நடைபெற்ற உரையரங்குக்கு பொற்றாமரை இலக்கிய இதழ் செல்வம் அழகப்பன் தலைமை வகித்தார். ஜியோ பார்க் க. மணிவண்ணன் வாழ்த்துரை வழங்கினார். பொற்றாமரை இலக்கிய அமைப்பின் மாவட்டத்தலைவர் அ. விஜயகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் ராம. சேதுபதி,
திரைப்பட தணிக்கைகுழு உறுப்பினர் கவிதாஸ்ரீகாந்த், பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத்தலைவர் எஸ். குணசேகரன், இந்திய உணவு பாதுகாப்புக்கழக உறுப்பினர் ஆர். ஜீவானந்தம், ஏவிசிசி பள்ளி நிர்வாகி ஏவிசிசி. கணேசன், விராலிமலை வர்த்தகர் சங்க தலைவர் ஆர்.பி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை பேராசிரியர் ராம சீனிவாசன்- காலமும், கணக்கும் நீத்த காரணன். சென்னை ஒரே நாடு ஆசிரியர் நம்பி நாராயணன்- அரசு நின்னதே, ஆள்க. பாரதியார் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் இரா. காயத்ரி- நம்பிக்கை நாயகன் எனும் தலைப்பில் பேசினர். இணைச்செயலர் காடுவெட்டி குமார் வரவேற்றார். விழாக்குழு உறுப்பினர் காசி. ராஜேந்திரன் நன்றி கூறினார்.
கம்பன் கழகத்தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.