Close
ஏப்ரல் 10, 2025 10:49 மணி

ஜூலை 22 ல் சித்தன்னவாசல் இலக்கியச் சந்திப்பு நடத்தும் மூன்று நூல்கள் வெளியீட்டு வீழா

புதுக்கோட்டை

சித்தன்னவாசல் இலக்கிய சந்திப்பு சார்பில் புதுக்கோட்டையில் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

சித்தன்னவாசல் இலக்கியச் சந்திப்பு நடத்தும் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா (22.07.2023) வரும் சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு  அறிவியல் இயக்க அரங்கில் நடைபெறவுள்ளது.

விழாவுக்கு கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகிக்கிறார்.

புலியூர் முருகேசன் எழுதிய பீ தணக்கன். சுரேஷ்மான்யா எழுதிய அப்பாவை வரச்சொல்லுங்கள்.  ப. வெங்கடேசன் எழுதிய பறவையின் குரலால் எழுதுபவன்.. ஆகிய  3 நூல்கள் வெளியிடப்படுகின்றன.

இலக்கிய விமர்சகர் ந. முருகேசபாண்டியன், கவிஞர் ஜீவி, ஸ்டாலின் சரவணன் ஆகியோர் கருத்துரை ஆற்றுகின்றனர்.

எழுத்தாளர்கள் பா. முத்து, புதுகை செல்வா ஆகியோர் முதல் பிரதியை பெறுகின்றனர்.

புலியூர் முருகேசன் எழுதிய பீ தணக்கன் சிறுகதை தொகுப்பு நூலை ஜோ.டெய்சிராணி,  சுரேஷ்மான்யா எழுதிய அப்பாவை வரச்சொல்லுங்கள் சிறுகதை தொகுப்பு நூலை கீதாஞ்சளி மஞ்சன், ப. வெங்கடேசன் எழுதிய பறவையின் குரலால் எழுதுபவன்  கவிதை தொகுப்பு நூலை க. உஷாநந்தினி ஆகியோர் அறிமுகம் செய்து உரையாற்றுகின்றனர்.

எழுத்தாளர் பீர்முகமது வரவேற்புரையையும், புதுகை புதல்வன் நன்றியுரையும் ஆற்றுகின்றனர்.விழாவை மைதிலி கஸ்தூரிரங்கன், த.ரேவதி ஆகியோர் ஒருங்கிணைத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top