Close
நவம்பர் 21, 2024 11:13 மணி

கம்பன் பெருவிழாவின் 6 -ஆவது நாள் கவியரங்கம்

புதுக்கோட்டை

கம்பன் பெருவிழாவில் பேசிய டாக்டர் ஜெய ராஜமூர்த்தி

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்) புதன்கிழமை  (ஜூலை 19)  மாலையில் நடைபெற்ற கம்பன் பெருவிழாவின் 6 -ஆவது நாள்   கவியரங்க நிகழ்வுக்கு  விஜய் நிறுவனங்களின் தலைவர் வீ. முருகானந்தம் தலைமை வகித்தார்.
கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி செயலர் கவிஞர் ஆர்எம்வீ. கதிரேசன் தொடக்க கவிதை வாசித்தார்.நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜே. ராஜசேகர், கவிஞர் ஜீவி ஆகியோர் வாழ்த்துக் கவிதை வாசித்தனர்.
கலைமாமணி கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் கம்பனில் காத்திருப்பதே சுகம் எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
கம்பன் கழக பெருவிழாவில் பேசிய மரபின் மைந்தன் முத்தையா
இதில், கவிஞர்கள் விவேக்பாரதி, வானதி சந்திரசேகரன், மு. அர்ச்சுணன், பொற்கை பாண்டியன்,  பாம்பன் மு. பிரசாந்தன், தஞ்சை இனியன்  ஆகியோர் கவிதையு ரையாற்றினார்.
முன்னதாக மாவட்ட  வர்த்தகர் கழக பொருளாளர் கவிஞர் எஸ். கதிரேசன் வரவேற்றார். விழாக்குழு உறுப்பினர் கவிஞர் நிலவை பழனியப்பன் நன்றி கூறினார்.
இதைத்தொடர்ந்து இரவு நடைபெற்ற எழிலுரை நிகழ்வுக்கு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  தலைமை வகித்து பேசினார்.
புதுக்கோட்டை
கம்பன் பெருவிழாவில் பேசுகிறார் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன்
மேனாள் சட்டமன்ற உறுப்பினர் “கவிச்சுடர்” இராசு. கவிதைப்பித்தன் வாழ்த்துரை வழங்கினார்.
சிறியன சிந்தியாதான் என்ற தலைப்பில் “நற்றமிழ் நாயகர்” டாக்டர். ஜெய ராஜமூர்த்தி உரை நிகழ்த்தினார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வை.முத்துராஜா, எம்.சின்னதுரை, மேனாள் ஒன்றியக் குழுத் தலைவர் கே.பி.கே.தங்கமணி , வெண்ணாவல்குடி மேனாள் ஊராட்சித் தலைவர் அரு.வடிவேலு, தென்னலூர் மா.பழனியப்பன், தமிழ்ச் சங்க நிர்வாகி த.சந்திரசேகரன், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் க. நைனாமுகம்மது.

நகர்மன்ற உறுப்பினர்  என்.சாத்தையா, திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் எம்.எம்.பாலு,  தலைவர்,  சிவகாமி அம்மாள் ரத்ததானக் கழகத் தலைவர்  சா. மூர்த்தி,புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனை  தலைமை தீவிர சிகிச்சை சிறப்பு மருத்துவர் சிவபிரகாஷ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக மு.இயலரசன் நினைவு அறக்கட்டளை நிர்வாகி இயல் தமிழ்வேந்தன் வரவேற்றார்.  ஒப்பந்தகாரர் ராம.நாராயணசாமி நன்றி கூறினார்.

கம்பன் கழகத்தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top