Close
நவம்பர் 22, 2024 10:30 காலை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்பாடு: அலுவலர்களுடன் ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நில நிர்வாக ஆணையர் திரு.எஸ்.நாகராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல் படுத்துவது குறித்து அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன்  தலைமையில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்துவது குறித்து, அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், நில நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா,  முன்னிலையில், மாவட்ட ஆட்சியரகத்தில் (19.07.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நில நிர்வாக ஆணையர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்  27.03.2023 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக வரலாற்றில் விளங்கவுள்ள, மாதம் ரூ.1,000 வழங்கிடும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” ஏறத்தாழ ஒருகோடி குடும்பத்தலைவிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.

அதன்படி “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்” புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,002 நியாய விலை கடைகளில் 4,91,998 குடும்ப அட்டையில் இடம்பெற்ற தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000/- வழங்கும் திட்டம் முதல் கட்டமாக, புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 வட்டங்களில் 597 அமைவிடங்களில் 852 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறும் பணி 24.07.2023 முதல் 04.08.2023 வரை செயல்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில் திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய 5 வட்டங்களில் 415 அமைவிடங்களில் 535 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறும் பணிகள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை செயல்பட உள்ளது.

முதல் கட்டத்தில் பெறப்படும் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்குத் தேவையான 852 பயோ மெட்ரிக் கருவி தயாராக உள்ளது. மேலும், இப்பணிகளில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு 10.07.2023 அன்று  Master Trainers   58 நபர்களுக்கும், அவர்கள் மூலம் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் 1507 நபர்களுக்கு 13.07.2023 அன்றும், பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.

மேலும், 15.07.2023, 17.07.2023 மற்றும் 18.07.2023 ஆகிய தேதிகளில் பயோ மெட்ரிக் கருவி மூலம் மேற்கண்ட தன்னார்வலர் களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் மகளிர் திட்ட தன்னார்வலர் களுக்கு 17.07.2023 அன்று தனியே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிர் திட்ட தன்னார்வர்களுக்கு 15.07.2023, 17.07.2023 மற்றும் 18.07.2023 ஆகிய தேதிகளில் பயிற்சி வகுப்பு நடத்தப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்காக 4,96,919 விண்ணப்பங்களும், 4,96,919 டோக்கன்களும் வரப்பெற்று முதல் கட்டமாக நடைபெறும் 7 தாலுகாவிற்குத் தேவையான 3,06,454 விண்ணப்பப் படிவங்கள் பிரித்து வட்டாட்சியர்கள் மூலம் அனைத்து தாலுகவிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கண்ட படிவங்களை நியாயவிலைக் கடைகள் வாரியாக பிரிக்கப்பட்டு, நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வதற்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரில் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) கட்டுப்பாட்டு அறை காலை 9. மணி முதல் மாலை 6. வரையில் செயல்படும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுபாட்டு அறையில் இளநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் 2 பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் தங்களது புகாரினை தெரிவிக்க ஏதுவாக 04322 – 295022 என்ற தொலைபேசி எண்ணும், 9445045622 என்ற வாட்ஸ்அப் எண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், முதல் கட்டமாக நடைபெறும் 7 தாலுகாவிலும், அதற்குட்பட்ட 589 நியாய விலை கடைகளிலும் இத்திட்டத்தில் பயன்பெறத் தேவையான தகுதிகள் குறித்து விளம்பரப் பதாகைகள் பொது மக்கள் பார்வையிடும் விதமாகவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில், கண்காணிப்பு பணியில் ஈடுபட துணை ஆட்சியர் நிலையில் 13 ஒன்றியத்திற்கும் கண்காணிப்பாளர் கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சரக அளவில் தனி வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், கூட்டுறவு சார் பதிவாளர் நிலையில் 26 மேற்பார்வை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சராசரியாக 10 முதல் 15 வரை உள்ள முகாம்களை கண்காணிக்க துணை வட்டாட்சியர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் நிலையில் 61 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்ட நெரிசலை சமாளிக்க 1,500 குடும்ப அட்டை உள்ள அமைவிடங்களுக்கு காவல் ஆய்வாளர் தலைமையில் Mobile Team  அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் முதற்கட்ட மாக நடைபெறும் ஒவ்வொரு தாலுகாவிற்கும் 10 காவலர்கள் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட நியமனம் செய்யப்பட்டுள் ளனர்.
எனவே பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்களை வழங்கிட தங்களுக்குரிய நாளில் வருகைதந்து, கூட்ட நெரிசலின்றி விண்ணப்பங்களை வழங்கலாம் என நிர்வாக ஆணையர் எஸ்.நாகராஜன்  தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்கோ.இராஜேந்திர பிரசாத், துணை ஆட்சியர் (பயிற்சி)  .ஜி.வி.ஜெயஸ்ரீ மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top