Close
ஏப்ரல் 5, 2025 12:44 மணி

விலைவாசி உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

விலைவாசி உயர்வைக்கண்டித்து புதுக்கோட்டை அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களில் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று(20.7.2023) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஜெயில் கார்னர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச்செயலர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ,  பி.கே. வைரமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில்முன்னாள் அமைச்சர்  டாக்டர் சி. விஜயபாஸ்கர் எம்எல்ஏ   பேசியதாவது:

புதுக்கோட்டை
அதிமுக ஆர்பபாட்டம்

கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை மற்றும் ஊனமுற்றோர் உதவித் தொகையை மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வழங்குகிறார்கள் அப்படி வழங்கும் இந்த உரிமை தொகைக்கு ரூ 1000 க்கு  ஆயிரம் கண்டிசன்களை திமுக அரசு விதித்துள்ளது

இதில் பாதிக்கப்படும் தாய்மார்கள் திமுக அரசின் விரைவில் வீட்டுக்கு அனுப்புவார்கள்.அவர்கள் வழங்கும் ரூபாய் ஆயிரத்தில் வெங்காயம், தக்காளி கூட வாங்க முடியாது ஒரு நாள் செலவிற்கே ரூ 1000 போதாது. வேண்டுமானால் மாதம் தோறும் ஒரு குடும்பத்திற்கு ரூ 10,000 வழங்க வேண்டும்.

விலைவாசிகளை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு தொடர்ந்து பால் விலை, மின்கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி, மதுபான கட்டணம் என அனைத்தையும் விலை உயர்வு செய்து வருகிறது.

தமிழக அமைச்சர்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்டு செய்து சொத்து சேர்ப்பதிலும், நீதிமன்றம், அமலாக்கப் பிரிவு விசாரணைகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

தற்போது ஒரு அமைச்சர் டாஸ்மாக்கில் ஊழல் செய்து ஊழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதனால் தமிழக மக்கள் உச்சகட்ட கோபத்தில் உள்ளனர் இலங்கையில் ராஜபக்ச அரசை தூக்கி எறிந்தது போல தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை மக்கள் விரட்டி அடிப்பார்கள் என்றார் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தக்காளி மாலை அணிந்து வந்த அதிமுக மகளிரணியினர்

இதில், முன்னாள் எம்எல்ஏ- வீ..ஆர். கார்த்திக்தொண்டைமான்,  நகரச்செயலாளர்கள் எஸ்ஏஎஸ்.சேட், க. பாஸ்கர், நிர்வாகிகள் வி.சி. ராமையா, வீ. ராமசாமி, பாசறை கருப்பையா, திருமயம் அழ. ராமு, பிஎல்ஆர். வேலு, அறந்தாங்கி ஆதிமோகன், பி.எம். பெரியசாமி,  வேலாயுதம், குழந்தைவேலு, அன்னவாசல் சுப்பையா, சாம்பசிவம், முத்தமிழ்செல்வன்.

விராலிமலை ஏ.வி. ராஜேந்திரன், திருமூர்த்தி, பழனியாண்டி, ஆவுடையார்கோவில் கூத்தையா, சுப்பிரமணியன், மணமேல்குடி துரை மாணிக்கம், பவித்ராகண்ணன், கீரனூர் கருப்பையா, தமிழரசன்,  கூகூர் பாலு,  கணேசன், கடையக்குடி திலகர், ஜீவாசெல்வராஜ் மற்றும் பொன்னமராவதி, கந்தர்வகோட்டை, குன்றாண்டார்கோவில், ஆலங்குடி உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top