Close
நவம்பர் 22, 2024 4:17 மணி

ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க கோரி கட்டுமானத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்ற வழிகாட்டுதல்படி ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லுடைக்கும் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) சார்பில் வியாழக்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் சி.அன்புமணவாளன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் க.ரெத்தினவேல், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சி.மாரிக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் பழனிவேலு, சாந்தார், செல்வராஜ், சரவணன் ஆகியோர் பேசினர். ஆர்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநில செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார்.

நீதிமன்ற வழிகாட்டுதல்படியும், நலவாரிய கூட்ட முடிவின்படியும் கட்டுமானத் தொழிலாளர்களுக்க ஓய்வூதியத்தை ரூ.3,000-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பணப்பலன்கள் கிடைக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். நிலுவை மனுக்களுக்கு உடனடியாகப் பணப்பலன்களை வழங்க வேண்டும்.

பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி நிதி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கமிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top