Close
நவம்பர் 21, 2024 10:55 மணி

புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவின் 7 -ஆவது நாள் விழாவில் கவிதைச்சோலை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை கம்ரன் கழக விழா பட்டிமன்றத்தில் பேசிய பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்

புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில்  ஜூலை 14 ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை 48 -ஆம் ஆண்டு கம்பன் விழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் (டவுன்ஹால்)  (ஜூலை 20)  மாலையில் நடைபெற்ற கம்பன் பெருவிழாவின் 7 -ஆவது நாளான வியாழக்கிழமை மாலை  5.30 மணிக்கு நடைபெற்ற கவிதைச் சோலை நிகழ்வுக்கு மாமலர் மருத்துவமனை, மா கிராண்ட் ஹோட்டல் நிறுவனர் ஆர்.மாரிமுத்து தலைமை வகித்தார்.

கவிஞர். பா.முத்துப்பாண்டியன் வரவேற்புக் கவிதை வாசித்தார். கவிஞர் சுவாதி தொடக்கக் கவிதை வாசித்தார்.

ராஜா பர்னிச்சர் – மெகா ஸ்டோர் நிறுவனர் புலவர். எம்.ராஜேந்திரன், கவிஞர் ஸ்டாலின் சரவணன் ஆகியோர் வாழ்த்துக் கவிதை  வாசித்தனர்.

தலைமைக் கவிஞர் கவிஞர், ரமா ராமநாதன்  கம்பனில் சிறுபாத்திரங்கள் எனும் தலைப்பில் உரையாற்றினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை கம்பன் பெருவிழாவில் நடைபெற்ற கவிதைச்சோவை

கவிஞர்கள்- பரத்திரங்கள்:

கவிஞர் அண்ணாசிங்காரவேலு – கலைக்கோட்டு முனிவர்(ராமன் அவதறிக்க யாகம் செய்தவர்).

கவிஞர் பீர் முகம்மது கவிஞர் கீதா-அகலிகை (கௌதமர் மனைவி). கவிஞர் கீதா-தாடகை (அரக்கி).

கவிஞர் புதுகைப் புதல்வன்-ஊர்மிளை (இலக்குவன் மனைவி)

கவிஞர் கவிபாலா- மாண்டலி (பரதன் மனைவி)

கவிஞர் நேசன் மகதி- கருதகீர்த்தி (சத்ருகனன் மனைவி) கவிஞர் ரேவதி- குரத்துவன் (சனகன் தம்பி).

கவிஞர் காசாவயல் கண்ணன் – பரசுராமர் (வில் ஆசிரியர்).

கவிஞர் டாக்டர் இந்திராணி-நிலமாலை (சீதை தோழி).

கவிஞர் ஏ.எம்.ஷெரிப்-கவந்தன் (அரக்கன்).

கவிஞர் சாமி கிரீஷ்-ஜாம்பவான் (கரடித் தலைவன்).

கவிஞர் டெய்சி ராணி -சபரி (தவத்தாய்).

கவிஞர் சிவகவி காளிதாஸ்-சுமந்திரன் (தசரதன் அமைச்சன்)

கவிஞர் ஷெல்லி மனோகரன்- சம்பாதி (பறவை).

கவிஞர் கீதாஞ்சலி மஞ்சன்-திரிசடை (வீடணன் மகள்).

கவின் பாரதி-சடாயு (கழுகு அரசன்)  ஆகிய தலைப்பில் பேசினர். கவிஞர்.கண்ணதாசன்- நன்றிக் கவிதை வாசித்தார்.

இதையடுத்து  இரவு 7 மணியளவில் நடைபெற்ற பட்டி மண்டபம் நிகழ்வுக்கு,  கம்பன் கழகச்செயலர் ரா. சம்பத்குமார் தலைமை வகித்தார்.

விழாவுக்கு பன்னீர் தேவர் அறக்கட்டளை தலைவர் பி.கருப்பையா,  கல்விக்குழுத் தலைவர் ஆர்.எஸ்.இந்திராணி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொருள்: கம்பன் காப்பியத்தில் மிகுதியும் காணப்பெறுவது, வள்ளுவத்தின் வழியா? சிலம்பின் நெறியா? என்ற தலைப்பில்  பட்டிமன்றம் நடைபெற்றது.

இதில்”கலைமாமணி “முனைவர். கு.ஞானசம்பந்தன் நடுவராக  இருந்தார்.

வள்ளுவத்தின் வழியே!  திருச்சிராப்பள்ளி முனைவர். சு.மனோன்மணி, ஈரோடு கோ.பா.ரவிக்குமார்

சிலம்பின் நெறியே !  திருவண்ணாமலை முனைவர். ம.எழிலரசி, நாகர்கோயில்  செல்ல. கண்ணன் ஆகியோர்  பேசினர். முன்னதாக கூடுதல் செயலாளர் ச. பாரதி வரவேற்றார். யோகா ஆசிரியர் புவனா பாண்டியன் நன்றி கூறினார்.

 ஏற்பாடுகளை கம்பன் கழகத்தலைவர் ச. ராமச்சந்திரன், செயலர் ரா. சம்பத்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top