அக்டோபர்-2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய மகாத்மா காந்திப் பேரவை நிறுவனர் வைர.ந.தினகரன் வெளியிட்ட செய்திதிக்குறிப்பு:
ஆண்டுதோறும் அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை காந்தியத் திருவிழாவாக கொண்டாடி வருகிறது.
அதனை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியும், மாவட்ட அளவிலான பல்வேறு கலைப் போட்டிகளையும் நடத்தும் பொருட்டு முதல் கட்டமாக மாநில அளவிலான கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு கடனில்லா தமிழகமும்,வறுமையில்லா மக்களும் உருவாக “அரசும், மக்களும் பின்பற்றவேண்டிய காந்திய வழி தீர்வுகள்ய இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000மும் இரண்டாம் பரிசாக ரூ.2000மும் மூன்றாம் பரிசாக ரூ.1000மும் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். பள்ளி (9ஆம் வகுப்புமுதல் 12ஆம் வகுப்பு வரை) மாணவர் களுக்கான கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு:
ஊழல், லஞ்சம், மது போதைகளற்ற தமிழகம் உருவாக “அரசும், மக்களும் பின்பற்றவேண்டிய காந்திய வழி தீர்வுகள்” இதில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2000 – மும் இரண்டாம் பரிசாக ரூ.1500ம் மூன்றாம் பரிசாக ரூ.1000 -மும் வழங்கப்படும். மேலும் 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். போட்டிக்கான விதிமுறைகள் கட்டுரை ஏ4 தாளில் 6 பக்கங்களுக்கு மிகாமலும், சுயசிந்தனையுடன் இருக்க வேண்டும்.
கல்லூரி முதல்வர், பள்ளி தலைமையாசிரியர் தங்கள் கல்லூரி, பள்ளியில் போட்டி நடத்தி அதில் முதல் இரண்டு கட்டுரைகளை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். கல்லூரி, பள்ளி முதல்வரின் ஒப்புதல் மற்றும் அடையாள அட்டையின் நகல் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கல்லூரி, பள்ளி முகவரி மற்றும் மாணவ,களின் முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். போட்டியின் முடிவுகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியான தாகும்.
கட்டுரைகளை அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை, 3473 – 1 தெற்கு 2 -ஆம் வீதி, புதுக்கோட்டை – 622001 என்ற முகவரிக்கு வருகின்ற 30.08.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டி முடிவுகள் 21.09.2023 அன்று அறிவிக்கப்படும். பரிசுகள் அக்டோபர் 2-2023 அன்று புதுக்கோட்டையில் நடைபெறும் காந்தியத் திருவிழாவில் வழங்கப்படும். மேலும் விவரங்க ளுக்கு 9443488752, 04322-222337 என்ற எண்களிலோ, gandhiperavai @gmail.com என்ற மின்னஞசல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.