Close
நவம்பர் 22, 2024 6:44 மணி

புதுக்கோட்டை புத்தக திருவிழா அழைப்பிதழை வெளியிட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழா அழைப்பிதழை வெளியிட்டார் ஆட்சியர் மெர்சி ரம்யா

புதுக்கோட்டைபுத்தகத் திருவிழா ஜூலை 28-இல் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு புத்தக திருவிழா அழைப்பிதழ் வெளியிடப்பட்டது.
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி அரசு உயர்துவக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், புத்தகத் திருவிழாவிழாக் குழு தலைவர் / மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  வெளியிட்டார். இதில் விழாக்குழு உறுப்பினர்கள் கலந்து  கொண்டு அழைப்பிதழ் விநியோகிக்கும் பணியை தொடங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக் கமும் இணைந்து   6-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா  ஜூலை 28-  முதல்   ஆகஸ்ட் 6 -ஆம் தேதி வரை 10 நாள்கள் நடத்துகின்றன.
புதுக்கோட்டை
மாவட்ட ஆட்சியருடன் புத்தகத்திருவிழா குழுவினர்
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெறும்  புத்தகத் திருவிழா  தினமும் காலை 9 மணிக்குத் தொடங்கி, இரவு 9 மணி நடைபெறுகிறது. நாள்தோறும்  மாலை 5 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி சிறப்புச் சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன.
 ஜூலை 28 – வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் நிகழ்வில்,  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று  புத்தகத் திருவிழாவைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் மாநிலத் தலைவர் எஸ். தினகரன் ஆகியோர் பேசுகின்றனர் .
2 -ஆம் நாளான ஜூலை 29-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழ்நாடு  சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன், மூத்த விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்,  முன்னாள் எம்எல்ஏ இரா.சு. கவிதைப் பித்தன் ஆகியோர் பேசுகின்றனர்.
3 -ஆம் நாளான ஜூலை 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மக்களிசைப் பாடகர்கள் செந்தில்கணேஷ்- ராஜலட்சுமி குழுவினரின்  நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
4 -ஆம் நாளான ஜூலை 31 -ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு வழக்குரைஞர் த. ராமலிங்கம், எழுத்தாளர் நந்ததாலா ஆகியோர் பேசுகின்றனர்.
5 -ஆம் நாளான ஆக. 1 -ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு எழுத்தாளர் ச. தமிழ்ச் செல்வன், பேராசிரியர் வெ.பா. ஆத்ரேயா ஆகியோர் பேசுகின்றனர்.
6 -ஆம் நாளான ஆக. 2 -ஆம் தேதி புதன்கிழமை மாலை 6  மணிக்கு  எழுத்தாளர் பவா.செல்லத்துரை, எழுத்தாளர் நக்கீரன், முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா ஆகியோர் பேசுகின்றனர்.
7  -ஆம் நாளான ஆக. 3 -ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பேச்சாளர் கவிதா ஜவஹர் சிறப்புரையாற்றுகிறார். இதைத் தொடர்ந்து கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெறுகிறது,
 8 -ஆம் நாளான ஆக. 4 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை . மாலை 6 மணிக்கு எழுத்தாளர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.
9 -ஆம் நாளான ஆக. 5 -ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு  தமிழ்நாடு  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் பேசுகின்றனர்.
நிறைவு நாளான ஆக.6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு  மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் நிறைவு விழாவில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் கவிதாராமு,  எழுத்தாளர் விழியன், நடிகர் தாமு  ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
ஏற்பாடுகளை புத்தகத்திருவிழா மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் கவிஞர் தங்கம்மூர்த்தி, கவிஞர் நா.முத்துநிலவன், அ. மணவாளன், முனைவர் ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, மு.முத்துக்குமார், த.விமலா, க.சதாசிவம், ஈ.பவனம்மாள், கவிஞர் ஜீவி, கவிஞர் ராசி. பன்னீர்செல்வன்,கவிஞர் எம். ஸ்டாலின் சரவணன்,கிருஷ்ண வரதராஜன், கவிஞர்  மு.கீதா  உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top