Close
ஏப்ரல் 5, 2025 11:48 மணி

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து கீரனூரில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து கீரனூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம் கட்சியினர்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்தக் கோரியும், பெண்கள் மீதான கொடுமையான தாக்குதலைக் கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீரனூர் காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் குன்றாண்டார்கோவில் ஒன்றியச் செயலர் எஸ். கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாவட்டச் செயலர் அ.ஸ்ரீதர், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலர் பி.பெருமாள், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலர் கே. பழனிவேல், கீரனூர் பேரூராட்சி உறுப்பினர் மா. மகாலட்சுமி, சிஐடியு ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் கா. கார்த்திகேயன், நகரச் செயலர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இரண்டு பழங்குடியினப் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரக் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top