Close
செப்டம்பர் 19, 2024 11:24 மணி

மணிப்பூரில் தொடரும் பாலியல் கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை

மணிப்பூரில் தொடரும் பாலியல் கொடுமைகளை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர், வாலிபர், மாணவர், தீ.ஒ.முன்னணியினர்

மணிப்பூரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும். மணிப்பூர் கலவரததை வேடிக்கை பார்க்கும் மோடி அரசின் ஆணவப் போக்கைக் கண்டித்தும் புதுக்கோட்டையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகளில் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க மாவடட த் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன்,  நகரச் செயலாளர் ஆர். சோலையப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஜீவானந்தம். தலைவர் டி.சலோமி,

மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுசிலா, வாலிபர் சங்க நகரச் செயலாளர் கு. ஜெகன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், தலைவர் அ.சந்தோஷ்குமார் , தமுஎகச மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் சரவணன், மாற்றுத்திறனாளிகள் சங்க நகரச் செயலாளர் ரமேஷ், உள்ளிட்டோர் கண்ட உரையாற்றினார்.

கறம்பக்குடியில்….

புதுக்கோட்டைகறம்பக்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர்

மணிப்பூரில் தொடரும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து வாலிபர், மாதர் சங்கத்தினர்  கறம்பக்குடியில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் தினேஷ் தலைமை வகித்தார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.நித்யா முன்னிலை வகிகத்தார்.

வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆ.குமாரவேல், முன்னாள் மாவட்டத் தலைவர் த.அன்பழகன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பி.வீரமுத்து மற்றும் சங்க நிர்வாகிகள் இளவரசி, ரம்யா, உமாராணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top