புதுக்கோட்டையிலுள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசுப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், விடுதியுடன் கூடிய பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியானது தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலமாக சிறப்பான கல்வி, தரமான உணவு, சீருடை, பிரெய்லி, அபாகஸ் போன்ற சிறப்பு கற்றல் உபகரணங்கள் பயிற்சி, இசைக் கருவிகள் வாசிக்க பயிற்சி, ஆண்டுக்கு ஒரு முறை கல்விச்சுற்றுலா, சிறப்பு கல்வி உதவித்தொகை என அனைத்தும் இலவச மாகவே வழங்கி சிறந்த முறையில் உரிய பாதுகாப்புடன் மாணவர்களின் நலனிற்காக சிறப்பாக இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் கல்வி பயின்றவர்கள் அரசுத்துறையில் கல்லூரி விரிவுரையாளர்களாகவும், ஆசிரியர்களாகவும், அரசு அலுவலர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை புதுக்கோட்டை பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்து அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளி சார்ந்த மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ள கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். தலைமை ஆசிரியர் ப.வடிவேலன் 9080855199, 9840272383, 04322-226452 ஆகும். முகவரி, பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி, ஆ.டு.யு. அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை 622001 ஆகும் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தகவல் தெரிவித்துள்ளார்.