Close
நவம்பர் 22, 2024 1:56 மணி

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி பெருந்திரள் போராட்டம்

புதுக்கோட்டை

நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் மனுக்கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் நடந்தது

நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சியில் செவ்வாய்க்கிழமை மனுக்கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.

அரசு அறிவித்தபடி நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி பேரூராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளுக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் பேரூராட்சி அலுவலகம் முன்பாக மனுக்கொடுக்கும் பெருந்திரள் போராட்டம் நடைபெற்றது.

அதனொரு பகுதியாக அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்திற்கு விதொச அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார்.

ஓன்றியத் தலைவர் சி.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்தது மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் பேசினார். போராட்டத்தை நிறைவு செய்து மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம் சிறப்புரையாற்றினார்.

கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

இதில்,  ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் 700-க்கும் மேற்பட்ட மனுக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top