Close
செப்டம்பர் 20, 2024 6:57 காலை

துளி நீர் அதிக பயிர் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்

புதுக்கோட்டை

துளிர் நீர் அதிக விளைச்சல் திட்டத்தில் பயன் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் துளி நீர் அதிக பயிர் திட்டத்தில், விவசாயிகள் பயன்பெறலாம்.

விவசாயிகள் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற்றிட அரசு தோட்டக்கலை துறை மூலமாக துளி நீர் அதிக பயிர் என்ற திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது ஆழ்குழாய் கிணறுகளிலும், திறந்த வெளி கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து வருகிற காரணத்தினால் இருக்கின்ற நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்து அதில் அதிக மகசூலை பெறுவதற்கு அனைத்து விவசாயிகளும் சொட்டு நீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்ய வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் விவசாயிகளின் நலனுக்காக ‘துளி நீர் அதிக பயிர்” திட்டத்தின் கீழ் 1745 எக்டர் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மத்திய, மாநில அரசு நிதியுடன் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் குறு விவசாயிகளுக்கு 2.5 ஏக்கர் பரப்பளவிலும், சிறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் பரப்பளவிலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்தில் அதாவது அதிகபட்சமாக 12.5 ஏக்கர் (5 எக்டர்) வரை சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

நிலமும், நீர் ஆதாரமும் உள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற தேவையான ஆவணங்களாக கணினி சிட்டா, ஆதார் கார்டு, ரேசன் கார்டு, நிலத்தின் வரைபடம், சிறுஃகுறு விவசாயி சான்று, வங்கி கணக்கு புத்தகம், அடங்கல், மண் மற்றும் தண்ணீர் பகுப்பாய்வு அறிக்கை, நிழற்படம் இரண்டு ஆகியவற்றை தங்கள் பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் வாயிலாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாக தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை இணையதள முகவரியான http//www.tnhorticulture.tn.gov.in/horti/mimis  – இல் விண்ணப்பிக் கலாம். நுண்ணீர் பாசன நிறுவனங்களை விவசாயிகள் தாங்களாகவே தேர்ந்தெடுக்கும் வசதியும் இணையதளத்தில் உள்ளது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா  தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top