போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தக் கோரிக்ககளை விளக்கி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் வாயிற்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைப்பட்ட தொகை அரசு கழகங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் அரசுக்கு எழுப்பி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகள் அடங்கிய 15-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்தையை அரசு உடனடியாகத் தொடங்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் வியாழக்கிழமையன்று வாயிற்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக நடைபெற்ற வாறிற்கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழிய சங்கத்தின் புதுக்கோட்டை மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார்.
கோரிக்ககைகளை விளக்கி மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் பி.செந்தில்நாதன், எஸ்.சாமிஅய்யா, எம்.முத்துக்குமார், பி.லோகநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வி.ஆனந்த் நன்றி கூறினார். பின்னர் புதுக்கோட்டை போக்குவரத்துப் பணிமனையிலிருந்து மண்டல அலுவலகம் வரை போக்குவரத்துத் தொழிலாளர்களின் பேரணி நடைபெற்றது.