Close
நவம்பர் 22, 2024 12:55 காலை

சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் அனுமதி அளிக்க வலியுறுத்தி 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் தொடக்கம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தொடங்கிய 1 கோடி கையெழுத்தியக்கம்

சித்த மருத்துவப் பல்கலைக்கழக சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திட வலியுறுத்தி  ஒரு கோடி கையெழுத்து இயக்கம் புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அதன் ஒருங்கிணைப்பாளர் சீ.அ. மணிகண்டன் தலைமை  வகித்தார்.

வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் தொடங்கி வைத்தார். முதல் கையெழுத்தை தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சி நிறுவனர் கே.எம்.ஷரீப் முதல் கையெழுத்திட்டார்.

நம் நாட்டில் இருக்கக்கூடிய அறிவியல் மரபின் மணி முடியென சித்தமருத்துவத்தை சொல்லலாம். ஆனால், விடுதலைக்குப் பின்னான காலமும், காலனியமும் போட்டுத் தந்த பாதையிலேயே பயணித்து வருகிறது.

வளர்ச்சி குன்றி, தேக்கத்தை சந்தித்துள்ள சித்த மருத்துவத் தின் மீட்சிக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்று பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் பல்வேறுவகையில் முயன்று வருகின்றனர்.

அதில் உலகெங்கும் வாழும் தமிழ்மக்களின் பெருகி கனவு களில் ஒன்றாகவே இந்தச் சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். காலத்தால் சித்த மருத்துவம் சற்று புறக்கணிக்கப்பட்டாலும் இயற்கையாலும், மனிதத்தவராலும் தொடர்ந்து அலை அலையாக எழும்பி பல புதிய தொற்று நோய்களுக்கு தீர்வாக இன்று அதுவே நம் முன் காப்பு அரணாக நிற்கிறது.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று உலகையே உலுக்கிக் கொண்டிருந்த போது சித்த மருத்துவமே ஆர்ப்பாட்டங்கள் எதுவுமின்றி மக்களின் உயிர்காத்து நின்றதன் மூலம் தனக்குள் பொதிந்து கிடக்கும் பேராற்றலை உலகுக்கு உணர்த்தியது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்த மருத்துவப் பல்கலைக் கழகத்தை தமிழகத்தில் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பி வைத்த  சட்ட முன்வடிவில் ஆளுநர் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துவதை கைவிட்டு  உடனடியாக  கையெழுத்திட  வலியுறுத்தி  இந்த மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலர் ஜிஎஸ். தனபதி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாநிலப் பொதுச்செயலாளர் க.சி. விடுதலைக்குமரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச்செயலர் அஷ்ரப்அலி, தமிஜக நிர்வாகி யூசுப் ராஜா, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை யினர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் இப்ராஹிம்பாபு, நகரகாங்கிரஸ் தலைவர் பாரூக்,  மாவட்ட பொதுச்செயலர் எம்ஏஎம். தீன்,  நகர்மன்ற உறுப்பினர் ராஜாமுகமது.

ரோட்டரி நிர்வாகிகள் அசோகன், சங்கர், எஸ்ஆர்வி. ராஜசேகர், சாலை விபத்து தடுப்பு விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் கண. மோகன்ராஜா உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஆளுநரை சந்தித்து வழங்க இந்தக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top