Close
நவம்பர் 22, 2024 9:17 காலை

பசுமை தமிழகம் இயக்கம் மூலம் பசுமைப்போர்வை பரப்பை 33 % அதிகரிக்க இலக்கு: ஆட்சியர் மெர்சிரம்யா தகவல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் .மெர்சி தலைமையில் நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வனத் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான பசுமைக்குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர்  மெர்சி ரம்யா தலைமையில் (28.07.2023) நடைபெற்றது.

கூட்டத்தில்  ஆட்சியர் பேசியதாவது: தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில், மாநிலத்தின் பசுமை போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் தற்போது உள்ள 23.27 % லிருந்து 33 % -ஆக உயர்த்தும் வகையில், பசுமை தமிழகம் இயக்கம் உருவாக்கப் பட்டு அனைத்து துறைகளின் மூலம் மரக்கன்று களை நடவு செய்யப்படவுள்ளது.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்த வரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குழு மாவட்டத்தில்   7.89 %  ஆக உள்ள பசுமைப் போர்வையினை அடுத்த 10 ஆண்டுகளில் 33%  -ஆக உயர்த்தும் வகையில், ஆண்டுதோறும் சராசரியாக 61  லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்திட வேண்டும்.

இம்மாபொரும் இலக்கினை அடையும் வகையில்,  மாவட்ட பசுமைக்குழு வனத்துறையுடன் இணைந்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்த்துறை, தோட்டக்கலைத் துறை, பள்ளிக்கல்வித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப் பணித்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மரக்கன்றுகளை ஆண்டு தோறும் நடுவதற்கு இலக்கீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எனவே அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களுக்கு முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2023-2024, 2024-2025, 2025-2026 ஆம் ஆண்டிற்கான இலக்கினை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, புதுக்கோட் டை மாவட்டத்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்றிட ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

மேலும் மரக்கன்றுகளை வளர்ப்பதில் ஆர்வமுள்ள பொது மக்கள் அனைவரும் http://gtm.org.in/gtmapp/login.aspx.  என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றார்  ஆட்சியர் மெர்சி ரம்யா.

இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப்பூர்), ப.ஜஸ்டின் ஜெபராஜ் (அறந்தாங்கி), துணை இயக்குநர் (தோட்டக்கலை) .குருமணி, செயற்பொறி யாளர் (காவேரி-வைகை-குண்டாறு) சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் உமாசங்கர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top