Close
நவம்பர் 22, 2024 2:46 மணி

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா(2023): காலை-மதியம் அமர்வுகள்: மாணவர்கள், கல்வியாளர், விஞ்ஞானிகள் கலந்துரையாடல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவின் 2-ஆம் நாள் நிகழ்வில் மாணவர்களிடையே பேசுகிறார் இந்து தமிழ் துணை ஆசிரியர் ஆதி. வள்ளியப்பன்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா(2023)வின் காலை, மதியம் அமர்வுகள்: மாணவர்கள், கல்வியாளர். விஞ்ஞானிகள் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.

29.07.2023- சனிக்கிழமை – அறிவியல் இயக்க கந்தர்வ கோட்டை ஒன்றிய நிர்வாகி எம். சண்முகம் தலைமையில் நடைபெற்ற காலை அமர்வில் அதோ அந்தப்பறவை எனும் தலைப்பில் இந்து தமிழ் துணை ஆசிரியர் ஆதி வள்ளியப்பன் கலந்துரையாடல் நடத்தினார்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா அரங்கில் பகல் நேர நிகழ்வில் பேசுகிறார், எழுத்தாளர் ஆதி. வள்ளியப்பன்

பிற்பகல் நிகழ்வில் புதுதில்லி விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன்,  வானம்.. வானம்… பார் என்ற தலைப்பில் அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ குமார் கலந்துரையாடல் நடத்தினார்.  எம். சின்னராஜா வரவேற்றார். த. கண்ணன் நன்றி கூறினார்.நிகழ்வை கோ.தெய்வீகசெல்வி ஆர்.வசந்தி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்

30.07.2023- ஞாயிறு – ஆவுடையார்கோவில் ஒன்றிய நிர்வாகி பி. வீரபாலன் தலைமையில் வானவில் மன்றம் கருத்தாளர்கள் “எங்கும் கணிதம் யாவும் அறிவியல் செயல்பாடுகள்” என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நடத்துகின்றனர். எஸ். சுரேஷ்ராஜன் வரவேற்பு. தி.க. சங்கர் நன்றியுரை. நிகழ்வை எம். காளீஸ்வரி. வி. ரஷ்யா ஆகியோர் ஒருங்கிணைக்கின்றனர்.

31.07.2023 -திங்கள்கிழமை-  பொன்னமராவதி ஒன்றிய பொறுப்பாளர் பெ.புவியரசு தலைமையில் நடைபெறும் முற்பகல் அமர்வில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் சதாசிவம், நீங்கள் தலைப்பு: அறிவியல் அற்புதங்கள், காகித மடிப்பு கலை குறித்து பயிற்சியளிக்கிறார்.

பிற்பகல் நிகழ்வில், அறிவியலும் விவசாயமும் எனும் தலைப்பில்  எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி முனைவர் ஆர். ராஜ்குமார் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.அ. அறிவுடைநம்பி வரவேற்பு.  கா. பிரபு நன்றியுரை.  ஒருங்கிணைப்பு எம். அப்ரின்பானு, எம். காவியா.

01.08.2023 -செவ்வாய்க்கிழமை குன்றாண்டார் கோவில் ஒன்றிய நிர்வாகி கே. வடிவேல் தலைமையில் நடைபெறும் முற்பகல் நிகழ்வில், விஞ்ஞானத்துளிர் பொறுப்பாசிரியர் எஸ்.டி. பாலகிருஷ்ணன்  சிந்தனைக்கு சில விளையாட்டுகள் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

02.08.2023- புதன்கிழமை அன்னவாசல் ஒன்றிய நிர்வாகி சாலைவேலம்மாள் தலைமையில் நடைபெறும் அமர்வில் அறிவியல் இயக்க மாநிலச்செயலாளர்  முனைவர் எஸ்.ஆர். சேதுராமன் தலைப்பு: மந்திரமா.. தந்திரமா..? (அறிவியல் அற்புதங்களை விளக்குதல்) நிகழ்வு நடைபெறுகிறது. வரவேற்பு அ. ராஜேந்திரன், நன்றியுரை கு. அன்புச்செல்வி. ஒருங்கிணைப்பு பி. ராதா, ஜெ.பராசக்தி, ஏ. மல்லிகா.

03.08.2023 வியாழன் – மணமேல்குடி ஒன்றிய நிர்வாகி க.ஜெயபாலன் தலைமையில் நடைபெறும் முற்பகல் நிகழ்வில்,  கணக்கும் இனிக்கும் என்ற தலைப்பில் அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலர் கல்வியாளர் எஸ்.சுப்பிரமணி கலந்துரையாடுகிறார். வரவேற்பு- அய்யனார். நன்றியுரை- சா. செந்திகுமார். ஒருங்கிணைப்பு- வி. சண்முகப்பிரியா, பி. ஜெனிட்டா.

விராலிமலை ஒன்றிய நிர்வாகி  மா. சிவானந்தம் தலைமையில் நடைபெறும் பிற்பகல் நிகழ்வில் அறிவில் விளையாட்டுகள் எனும் தலைப்பில்  கலைமாமணி காரைக்குடிகருணாநிதியும் மாணவர்களுடன் கலந்துரை யாடுகிறார். வரவேற்புரை- வி.எஸ். ஆரோக்கியசாமி, நன்றியுரை- எஸ். வின்சென்ட் ஆரோக்கியசாமி. ஒருங்கிணைப்பு- பி. ரேவதி, எஸ்சாந்தி.

04.08.2023-வெள்ளிக்கிழமை  அரிமளம் ஒன்றிய நிர்வாககி சி. சேதுராமன் தலைமையில் நடைபெறும் அமர்வில், அறிவியல்  இயக்க மாநில துணைத்தலைவர்  எம். மாணிக்கத்தாய், பேராசிரியர் க. உஷாநந்தினி  ஆகியோர் ஆரோக்கிய இயக்கம் என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரை யாடுகின்றனர். வரவேற்புரை- எம். சேதுபதிராஜா, நன்றியுரை- எம். சாமிநாதன். ஒருங்கிணைப்பு- பி. சுமதி.

05.08.2023- சனிக்கிழமை  திருமயம் ஒன்றிய நிர்வாகி பி. குமார்,  திருவரங்குளம் ஒன்றிய நிர்வாகி எஸ்.ஏ. கருப்பையா ஆகியோர் தலைமையில்  நடைபெறும் நிகழ்வில்,  சென்னை எழுத்தாளர் விழியன் பங்கேற்ரு மலைப்பூ நூலை  வெளியிடுகிறார்.

06.08.2023 ஞாயிற்றுக்கிழமை அறந்தாங்கி நிர்வாகி கவி. கார்த்திக், கறம்பக்குடி நிர்வாகி வி. முத்து ஆகியோர் தலைமையில்  நடைபெறும் நிகழ்வில் விருதுநகர் அ. அமலராஜன், ஒரிகாமி (காகிதக் கலை) எனும் தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

கோளரங்கம் மற்றும் அறிவியல் பேருந்து ஒருங்கிணைப்பு : க, செந்தில், எம். வீரமணி.  எம்.வெள்ளைச்சாமி, கே. ராஜா, மகேஷ்வரன் ஆகியோர் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top