புதுக்கோட்டை மாவட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு (ECI – EVM &VVPAT) நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் அமைந் துள்ள ECI – EVM & VVPAT வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல் நிலை சோத னைகள் (First Level Checking) செய்யப்பட்;ட வாக்குப் பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு (MOCK-POLL) நடைபெறுவதை அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று (29.07.2023) நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ECI – EVM & VVPAT வைப்பறையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங் களுக்கான முதல் நிலை சோதனை பணிகளை பெல் நிறுவனத்தினை சேர்ந்த பொறியாளர்கள் மூலமாக கடந்த 04.07.2023 முதல் 28.07.2023 வரை 3316 Ballot Unit, 2204 Control Unit, 2500 VVPAT உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யப்பட்டதில் பழுது நீக்கம் நீங்கலாக 3277 Ballot Unit, 2106 Control Unit, 2390 VVPAT உள்ளிட்டவைகள் முதல் நிலை சோதனையில் ஏற்கப்பட்டது.
மேற்படி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை இன்று (29.07.2023) காலை 9:30 மணியளவில் மாதிரி வாக்குப்பதிவு (MOCK-POLL) செய்யும் பணி தொடங்கப்பட்டது. இப்பணிகளில் பெல் நிறுவனத் தினை சேர்ந்த 8 பொறியாளர்கள், வருவாய்த் துறையினைச் சேர்ந்த அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .க.ஸ்ரீதர்;, தனி வட்டாட்சியர் (தேர்தல்) அ.சோனை கருப்பையா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.