Close
நவம்பர் 22, 2024 4:42 மணி

கிராமப்புற மாணவர்களுக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை

கோரிக்கைககள்

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வாழைக்குறிச்சி மற்று ம் மல்லம்பட்டி கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்துத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியர் மெர்சி ரம்யாவிடம் இந்த கோரிக்கை  மனுக்கள் அளிக்கப்பட்டன.
திருமயம் ஒன்றியச் சேர்ந்த வாழைக்குறிச்சி கிராம  பொதுமக்கள் அளித்த மனு:
வாழைக்குறிச்சி, நெய்வேலி கிராமங்களில் இருந்து குழிபிறை பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லை. சுமார் 5 கிமீ தொலைவு நடந்தும், மிதிவண்டியிலும் வந்து பள்ளிக்குச் சென்று திரும்ப வேண்டியுள்ளது. எனவே, மாலை நேரத்தில் மட்டுமாவது பேருந்து வசதியை அரசு செய்துத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
களமாவூர் அருகேயுள்ள மல்லம்பட்டி கிராம மக்கள் அளித்த மனு:
களமாவூர் அருகேயுள்ள மல்லம்பட்டி, கொம்பத்தங்காடு, சின்ன மூலிப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 6 கிமீ தொலைவு நடந்து வந்து வடக்குப்பட்டியில், கீரனூர்- விராலிமலை பேருந்தைப் பிடிக்க வேண்டியுள்ளது. எனவே, இந்த கிராம மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து வசதி செய்துத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top