புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடத்தும், 6 -ஆவது புத்தகத் திருவிழாவை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் .எஸ்.ரகுபதி (28.07.2023) வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
புதுக்கோட்டை நகர்மன்றத்தில் 28.07.2023 முதல் 06.08.2023 வரை 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்று, தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி படித்து பயன்பெற வேண்டுமென மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் வேண்டுகோள் வைத்ததனர்.
புத்தகத் திருவிழாவிற்கு வாசகர்களை, பொதுமக்களை ஈர்ப்பதற்காக விழாக்குழுவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக பள்ளிக் கல்விதுறையின் சார்பில் மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அரசுப் போக்குவரத்து த்துறையின் வாகனத்திலும், தனியார் பள்ளிகளுக்கு சொந்த வாகனத்திலும் மாணவ, மாணவிகளை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், புத்தக்திருவிழாவுக்கு வலு சேர்க்கும் விதமாக மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் சாலைகளிலும் எழுதப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி- ஜல்லிக்கட்டு காளை சிலை அருகிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகவும் பிரமாண்டமாக எழுதப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு ஓவியத்தை புதுக்கோட்டை தூய மரியன்னை ஓவிய ஆசிரியர் தனபால் தன்னார்வத்துடன் வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்குழுவைச்சேர்ந்த கவிஞர் ஜீவி உள்ளிட்டோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.