சாதாரண மனிதனை மகத்தான மனிதனாக மாற்றுவதற்கு புத்தகங்கள்தான் பெரிதும் பயன்படும் என்றார் கவிதா ஜவஹர்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற சொற்பொழிவில், நோக்கும் திசையெல்லாம் நூலின்றி வேறில்லை என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது
மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றார் எழுத்தாளர் ஜி. நாகராஜன். மனிதனின் திறமைகளை அவனுக்கு சொல்லி புரிய வைத்துவி்டடால் அவனை விட மகத்தானவன் இருக்கவே முடியாது என்றார் ரஷிய எழுத்தாளர் ஆன்டன் செக்காவ்.
சல்லிப்பயல் என்ற நிலையில் இருந்து மகத்தான மனிதனாக மாற்ற புத்தகங்கள்தான் பெரிதும் பயன்படும். தஞ்சாவூரில் ஒரு பழக்கடைக்காரர் தன்னிடம் தொடர்ந்து பழம் வாங்கும் வாடிக்கையாளருக்கு புத்தகங்களை இலவசமாகக் கொடுக்கி றார். நிலக்கோட்டையில் ஒரு நகைக்கடைக்காரர், அவருக்குப் பிடித்த எழுத்தாளரின் பிறந்த நாளில் நகை வாங்குவோருக்கு சலுகை கொடுக்கிறார்.
தூத்துக்குடியில் ஒரு சலூன்கடைக்காரர் தனது வாடிக்கை யாளர்களுக்கு நிறைய புத்தகங்களை வைத்து படிக்க வைக்கிறார். ஒரு தீவிர வாசிப்பாளன், சிறிய- பெரிய தொழிலதிபர்களாக இருந்தால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கு இவர்களெல்லாம் எடுத்துக்காட்டு.
குழந்தைகள் உலகம் எவ்வித மாச்சரியங்களும் இல்லாத உலகம். அவர்களைப் படம் வரையச் சொன்னால், அந்தப் படத்தில் வீடு இருக்கும், ஒரு புறம் சூரியன், இன்னொரு புறம் நிலா, கீழே நதி, மேலே மலை எல்லாமும் இருக்கும். அத்தனை வெள்ளந்தியான படைப்பாளர்கள் அவர்கள்.
எனவே, இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நல்ல நூல்களைக் கொடுத்து வாசிக்க வைக்கும் முயற்சியை மேற்கொண்டால் அது பெரும் பயனை இச்சமூகத்துக்கு கொடுக்கும். எதிர்காலத் தில் வளமான சமூகம் உருவாகும் என்றார் கவிதா ஜவஹர்.
தொடர்ந்து கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் சுழலும் கவியரங்கம் நடைபெற்றது. கவிஞர்கள் நேசன் மகதி, சாமி கிரிஷ், கீதாஞ்சலி மஞ்சன், மைதிலி கஸ்தூரி ரெங்கன், ந. ரேவதி ஆகியோர் கவியரங்கில் பங்கேற்று கவிதை வாசித்தனர்.