Close
நவம்பர் 22, 2024 7:25 மணி

19 ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா இனிதே தொடங்கியது

ஈரோடு

ஈரோட்டில் இனிதே தொடங்கிய புத்தகத்திருவிழா

தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 19 ஆவது ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவின் தொடக்க விழா ( 04.08.2023) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் அறிமுகம் செய்து அனைவரையும் வரவேற்றார்.

தொடக்க விழா நிகழ்விற்கு  மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்து புத்தக அரங்கினைத் திறந்து வைத்து   பேசினார்..

ஈரோடு மாநகராட்சி மேயர்  நாகரத்தினம் சுப்பிரமணியம்  முன்னிலை வகித்தார். துணை மேயர் வி.செல்வராஜ் வாழ்த்திப் பேசினார்.

தேசியநல விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ எஸ்கேஎம்.மயிலானந்தன் முதல் விற்பனையைத் தொடக்கி வைத்தார்.  நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.சண்முகன் பெற்றுக் கொண்டார்.

மக்கள் சிந்தனைப் பேரவையின் செயலாளர் ந.அன்பரசு நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகத்தினர், நகரின் முக்கியப் பிரமுகர்கள். வாசகர்கள், பொதுமக்கள் மாணவர்கள் என பலதரப்பட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top